"நான் ஆஃபிசுக்கு வந்துதுதான் வேலை பார்ப்பேன்..."போதும் ராசா, நீ வீட்ல இருந்தே வேலை பாரு... 'அடம்' பிடிக்கும் ஊழியர்களை 'வலுக்கட்டாயமாக'... 'வீட்டுக்கு' அனுப்பும் 'செய்தி நிறுவனங்கள்'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தொற்றால், செய்தி நிறுவனங்களும், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளன.

பிலிப்பைன்சில் உள்ள சி.என்.என்., அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அலுவலகத்தை பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளித்துச் சுத்தப்படுத்தவுள்ளனர். இதற்காக, குறைந்தது அடுத்த 24 மணி நேரத்திற்கு, சி.என்.என்., தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல் லண்டன் பி.பி.சி., செய்தித் தொலைக்காட்சி, கொரோனா வைரஸ் தொற்றால் தன் ஊழியர்கள் பலரையும் வீட்டிலிருந்த படியே வேலை பார்க்க, சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. ஆனால், சில நிகழ்ச்சிகள் அலுவலகத்திலிருந்து இயங்க வேண்டியிருந்ததால், குறிப்பிட்ட சில ஊழியர்கள் மட்டும் அலுவலகம் வந்து, வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பி.பி.சி., செய்தி அறையிலும், கொரோனா வைரஸ் தொற்று தன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பி.பி.சி., நியூஸ் இயக்குநர் பிரான் அன்ஸ்வர்த் தெரிவித்துள்ளார்.

'உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்கள்  வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என, டவிட்டர் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்து விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வீட்டிலிருந்த படியே வேலை செய்து வருகின்றனர். தங்கள் நிறுவன ஊழியர்கள் தேவையற்ற வியாபார சந்திப்புகள் மற்றும் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்' எனவும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

CORONA, BBC, CNN, NEWS DEPARTMENT, WORK FROM HOME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்