"ஒமிக்ரான் பாதிச்ச எல்லாருக்கும்... அந்த 'ஒண்ணு' மட்டும் ஒரே மாதிரி இருக்கு.." எச்சரிக்கும் 'விஞ்ஞானிகள்'..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தியிருந்தது.

Advertising
>
Advertising

இதன் காரணமாக, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல், உலகெங்கிலுமுள்ள மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கவும் நேர்ந்தது. இதன் இரண்டாம் அலையும் மக்களை அதிகம் வாட்டி எடுத்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பில் இருந்து இதன் தாக்கம் குறைந்திருந்தது.

ஆனால், தற்போது ஒமிக்ரானின் பிடியில் சிக்கித் தத்தளித்து வருகிறது உலக நாடுகள். இதுவரை சுமார் 100 நாடுகளுக்கு மேல், இந்த ஒமிக்ரான் தொற்று, பரவி உள்ளதையடுத்து, இதன் மூலம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில்,  மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் தொற்று, இதுவரை 7 மாநிலங்களில் பரவியுள்ளது.

இந்த ஒமிக்ரான் என்னும் கொடிய தொற்று, டெல்டா வைரஸை விட பன்மடங்கு வீரியம் உள்ளது என்றும், வேகமாக பரவக் கூடியது என்றும், நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த கொடிய தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே வேளையில், இந்த ஒமிக்ரான் தொற்றின் அறிகுறிகள் என்ன என்பது குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன், பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், புதிய அறிகுறிகளாக மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு மற்றும் தொண்டை வறட்சி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் என கூறப்பட்டிருந்தது. ஒமிக்ரான் பற்றிய அறிகுறிகள் குறித்து ஆய்வுகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், ஆரம்பத்தில் இருந்தே பொதுவான அறிகுறியாக இருப்பது தொண்டை வலி தான் என கூறப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், ஒமிக்ரான் பரவ ஆரம்பித்த நாடுகளான தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தொண்டை வலி தான் முதலில் இருந்துள்ளது. இதன் பிறகு, மூக்கடைப்பு அடுத்த அறிகுறியாக இருக்கிறது.

மேலும், ஜோ சிம்ப்டம் டிராக்கிங் என்ற மற்றொரு ஆய்வில், மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு, தும்மல், தொண்டை புண் போன்றவை ஒமிக்ரானின் அறிகுறிகள் என்று கூறப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், டெல்டா வைரஸுக்கும், ஒமிக்ரானுக்குமான அறிகுறிகள் வேறு வேறாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். டெல்டா வைரஸ் பாதித்தால், சுவை மற்றும் வாசனை தெரியாமல் போகும். காய்ச்சல், இருமல், சோர்வு போன்றவை அறிகுறிகளாக இருக்கும்.

ஆனால், ஒமிக்ரான் பாதித்தால், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தும்மல் என குளிர் தொடர்பான அறிகுறிகள் தென்படும் என்றும், இப்படியான அறிகுறிகள் தென்பட்டால், சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

OMICRON, SYMPTOMS, VARIANT, ஒமிக்ரான், உலக நாடுகள், WHO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்