'13 வயது சிறுமியை...' '7 ராணுவ வீரர்கள் சேர்ந்து...' பள்ளிக்கு சென்றபோது நடந்தேறிய கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொலம்பியா ராணுவ வீரர்கள் 7 பேர் பள்ளிக்கு சென்ற 13 வயது பழங்குடி சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அந்நாட்டில் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.

'13 வயது சிறுமியை...' '7 ராணுவ வீரர்கள் சேர்ந்து...' பள்ளிக்கு சென்றபோது நடந்தேறிய கொடூரம்...!

உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, அதனை தடுக்கும் பணியில் காவல் துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொலம்பியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இராணுவ வீரர்கள் நகரங்களிலும், ஊர் பகுதிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வடக்கு கொலம்பியாவில் உள்ள எம்பெரா பழங்குடியினத்தைச் சேர்ந்த 13 வயது பெண் குழந்தை பள்ளிக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய அவரது தாயார் மற்றும் அப்பகுதி மக்கள் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமி தனது பள்ளியில் இருப்பதை கண்டு, அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது இரத்த வழிந்த  நிலையில் இருக்கும் சிறுமியால், ​ நடக்க முடியவில்லை. உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், அப்பகுதியில் பணியில் இருந்த 7 ராணுவ வீரர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட ராணுவவீரர்களும் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு அந்நாட்டின் அதிகபட்ச தண்டனையான 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

கொலம்பியாவில் 2020 ஆம் ஆண்டில் 110 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இதில், 50 பேர் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்