"உயிரோட இருக்குறவங்கள விட இறந்தவங்க அதிகம்".. அமைதியான நகரம்.. 1000 கல்லறைகளுக்கு ஒருவர் கணக்கு.. சில்லிட வைக்கும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்த உலகிலுள்ள ஏராளமான இடங்கள் தொடர்பான செய்தி, அவ்வப்போது இணையத்தில் வலம் வந்து பலரையும் பிரம்மிப்பில் அல்லது அதிர்ச்சியில் உறைய வைக்கும்.

Advertising
>
Advertising

Also Read | கடலுக்கடில நடந்த விபரீதம்.. ஒரு கிலோமீட்டருக்கு கொந்தளித்த கடல்.. மொத்த ஐரோப்பாவும் இப்போ பயத்துல தான் இருக்கு..!

பல ஆண்டுகளாகவே, இப்படி ஒரு இடம் இருப்பது தொடர்பான செய்திகள், அதன் அருகே உள்ளவர்களுக்கு இயல்பான ஒன்றாக இருந்தாலும் இணையத்தில் அவை பற்றி தகவல் வெளியாகும் போது தான், உலக அளவில் பேசு பொருளாக கூட மாறும்.

சமீபத்தில் கூட, நூறு ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், ஒரே ஒரு கட்டிடம் தான் ஒட்டுமொத்த நகரமாக செயல்பட்டு வருகிறது என்ற தகவல் கூட நெட்டிசன்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது.

அந்த வகையில், தற்போது ஒரு இடம் தொடர்பாக வெளிவந்துள்ள தகவல், பலரையும் ஒரு நிமிடம் சில்லிட வைத்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே உலகின் அமைதியான நகரம் ஒன்று இயங்கி வருகிறது. உலகிலேயே அமைதியாக இருக்கும் நகரம் என பெயர் வருவதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். கோல்மா (Colma) என்ற நகரம், 1900 க்கு முன்பு வரை சாதாரண பகுதியாக தான் இருந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், 1920 ஆம் ஆண்டு முதல் 1941 வரை இந்த பகுதியில் நிகழ்ந்த விஷயங்கள் தான் இதனை ஒட்டுமொத்தமாக மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு காரணம், அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், சான் பிரான்சிஸ்கோ பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த உடல்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்போதைய அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த எல்லா உடல்களும் கோல்மா நகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கே அடக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அந்த சமயத்தில் கொண்டு வரப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 1.5 லட்சம் ஆகும் என சொல்லப்படுகிறது. இதற்காக, தலா 10 டாலர் வீதம் வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் தான், சான் பிரான்சிஸ்கோ மறு கட்டமைப்பு செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது கோல்மா நகரில் 15 லட்சம் கல்லறைகள் வரை உள்ளது. ஆனால், இங்குள்ள மக்கள் தொகை எண்ணிக்கை என்பது சுமார் 1,500 பேர் தான் என ஒரு சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த கணக்கெடுப்பு சொல்கிறது.

அதாவது, 1000 கல்லறைகளுக்கு ஒரு நபர் என்ற வீதத்தில் கோல்மா நகரத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நாட்கள் செல்ல செல்ல, இங்குள்ள இடுகாடுகளின் அளவுகள் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கல்லறைகள் எண்ணிக்கையை விட மக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தான், கோல்மா நகரத்திற்கு உலகின் மிக அமைதியான நகரம் என்ற பெயரும் வந்தது.

கோல்மா நகரம் தொடர்பாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது இது தொடர்பான செய்தி மீண்டும் வைரலாகி, பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது.

Also Read | சஞ்சு சாம்சன் பெயரை கத்திய ரசிகர்கள்.. உடனடியா பேருந்தில் இருந்த சூர்யகுமார் செஞ்ச விஷயம்.. கிரிக்கெட் ரசிகர்கள் லைக்ஸை அள்ளிய வீடியோ!!

GRAVEYARDS, COLMA TOWN, SILENT CITY, COLMA TOWN NAMED CITY OF SILENT

மற்ற செய்திகள்