உங்க 'இஷ்டத்துக்கு' பண்ணிட்டு இருக்கீங்க... இது எல்லாம் 'நல்லதுக்கில்ல'... சொந்த 'கட்சியில்' கிளம்பிய 'எதிர்ப்புக்' குரல்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா அதிகளவில் அச்சுறுத்திய நிலையில், அமெரிக்காவை கடுமையாக பாதித்தது. லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு எதிராக டிரம்ப் அரசு, சிறப்பான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து சில வாரங்களுக்கு முன், அமெரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் போலீசார் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த பயங்கர கொலையால் அமெரிக்கா முழுவதும் நிறவெறிக்கு எதிரான போராட்டக்களமாக மாறியது.
ராணுவத்தை கொண்டு போராட்டத்தை ஒடுக்குவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதனால் போராட்டக்காரர்கள் மேலும் கொந்தளித்து தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர். போராட்டத்தை குறித்து டிரம்ப்பின் கருத்திற்கு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். மேலும் பலர் தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், டிரம்ப்பை எதிர்த்து புதிய குரல் ஒன்று சொந்த கட்சியிலேயே கிளம்பியுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் முன்னணி பொறுப்பில் இருந்த காலின் பாவெல், தன் ஓய்வுக்குப் பிறகு ட்ரம்ப் இருக்கும் அதே குடியரசு கட்சியில் இணைந்து அரசியல்வாதியாகச் செயல்பட்டு வரும் நிலையில், டிரம்ப்பின் செயல்பாட்டிற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். 'நாட்டிலுள்ள அரசியலமைப்பை பின்பற்றாமல் அதிபர் டிரம்ப் செயல்பட்டு வருகிறார். இது அமெரிக்க ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் நிச்சயம் டிரம்ப்பிற்கு நான் வாக்களிக்க போவதில்லை. அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனுக்கு தான் வாக்களிப்பேன்' என காலின் பாவெல் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் கொரோனா அச்சுறுத்தல், மறுபக்கம் போராட்டக்களமாக மாறியுள்ள அமெரிக்காவில், தொடர்ந்து அதிபர் டிரம்ப் செயல்களுக்கு எதிர்ப்பு கிளம்பி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சொன்ன மாதிரி 'கன்ட்ரோல்' பண்ணிட்டீங்க... ரொம்ப 'தேங்க்ஸ்'... 'டிரம்ப்' ட்விட்டர் பதிவால்... மீண்டும் 'கடுப்பான' மக்கள்!
- போராட்டத்தால 'ஏரியா' ஃபுல்லா குப்பையா கெடக்கு... 10 மணி நேரம், ஒன் மேன் ஆர்மியாக... அசத்திய 18 வயது இளைஞர்!
- 'அமெரிக்காவ மட்டும் சொல்றீங்க'... 'இந்தியா, சீனாவுல இத பண்ணுங்க, அப்ப தெரியும்'... டிரம்ப் அதிரடி!
- 'அமெரிக்க எழுத்தாளரை' பலாத்காரம் செய்த 'பாக். அமைச்சர்...' 'ஃபேஸ்புக் நேரலையில்' பகிரங்க 'குற்றச்சாட்டு...' 'பரபரப்பை' ஏற்படுத்திய 'நேரலை வீடியோ...'
- VIDEO : '75 வயது' முதியவரை... பிடித்து கீழே தள்ளிய 'அமெரிக்க' போலீசார்... "கீழ விழுந்ததுல அவருக்கு"... மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்திய 'சம்பவம்'!
- போராட்டக்களமான 'அமெரிக்கா'... மில்லியன் 'லைக்ஸ்'களை அள்ளிக்குவித்த 'மூவரின்' புகைப்படம்... காரணம் என்ன?
- 'ஜார்ஜ் பிளாய்ட்' கொலை வழக்கில் 'திருப்பம்...' 'படுகொலைக்கு' பிந்தைய சோதனையில் 'கொரோனா உறுதி...' 'டாக்டர்கள்' தந்த 'அதிர்ச்சி ரிப்போர்ட்...'
- 'அமெரிக்காவில் ஐஃபோன் கடைகள் சூறை...' "நீங்களே திருப்பி குடுத்திருங்க..." "இல்லன்னா?..." 'திருடர்களுக்கு' ஆப்பிள் நிர்வாகம் 'எச்சரிக்கை...'
- இப்படியே குத்தம் சொல்லிட்டு இருங்க... கடைசில உங்களுக்கு தான் 'ஆப்பு'...
- "இந்த சின்ன கூட்டத்த வெச்சுலாம்.. எங்களை ஒன்னும் பண்ண முடியாது!" - மீண்டும் கட்டையைப் போடும் சீனா!