'வட கொரிய அதிபர் கிம் ஜாங் கவலைக்கிடம்'... 'புயலை கிளப்பியிருக்கும் சி.என்.என்'... எல்லாம் மர்மமாவே இருக்கே !

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் பரபரப்பு செய்தியினை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் அன், உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக கருதப்படுகிறார். வெளி உலகத்துடம் வட கொரியாவிற்கும் எந்த வித தொடர்பும் இல்லாத அளவிற்கு அங்கு கட்டுப்பாடுகள் அதிகம் என்பதால், வட கொரியாவில் என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்திற்கு எதுவும் தெரியாது. அதற்கு முக்கிய காரணம் வட கொரியாவில் ஊடகங்கள் அரசின் வசமே உள்ளன. இதனால் சீனாவுக்கு மிக அண்டை நாடாக இருக்கும் வடகொரியாவில் கொரோனாவால் எந்த வித பாதிப்பும் இல்லை என வட கொரியா கூறியது.

கொரோனா பாதித்தவர்களை வட கொரியா சுட்டுக்கொன்றிருக்கலாம் என்று கூட கூறப்பட்டது. சீனாவுக்கு மிகவும் அருகில் இருந்துகொண்டு கொரோனா பாதிக்கவில்லை என்று கூறுவது நம்பும் படியாக இல்லை என, சர்வதேச அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் கிம்-மின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் உலா வந்து கொண்டிருந்த நேரத்தில், சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது தான் என கூறப்பட்டுள்ளது. சி.என்.என் வெளியிட்டுள்ள செய்தியில், வட கொரிய விவகாரத்தை கவனிக்கும் அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி அது செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க உளவுத்துறை இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய உளவுத்துறையிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கிம்-மின் உடல்நிலை குறித்த தகவலை தென் கொரியா மறுத்துள்ளது. அது போன்று எந்த ஒரு நகர்வும் வட கொரியாவில் தென்படவில்லை என, தென் கொரியா கூறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்