'துணி மாஸ்க் யூஸ் பண்றது நல்லது தான்'... 'ஆனா இத கண்டிப்பா செய்ங்க'... எச்சரித்துள்ள ஆய்வாளர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் துணி மாஸ்குகளை பண்படுத்தி வரும் நிலையில், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வரும் வேளையில், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதே வேளையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், மாஸ்க் அணிதல் போன்ற அடிப்படை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என அரசாங்கமும், மருத்துவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
தற்போது பொதுமக்கள் துவைத்து மீண்டும் பயன்படுத்தும் துணி வகையிலான மாஸ்குகளை பெருவாரியாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் துணி வகை மாஸ்குகளை அழுக்கானால் மட்டுமே துவைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால் துணி வகை மாஸ்குகளை தினமும் துவைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும், ஆய்வாளருமான ரெய்னா மெக்கண்டைர் தெரிவித்துள்ளார். இது குறித்துத் தெரிவித்துள்ள அவர், சர்ஜிக்கல் மாஸ்க், மற்றும் துணி மாஸ்க் இரண்டுமே எளிதில் அசுத்தமாகக் கூடியவை.
இதில் சர்ஜிக்கல் மாஸ்க்கை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீண்டும் அதனைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் துணை மாஸ்கை துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் துணி மாஸ்க்கை தினமும் துவைக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் போதே அது கிருமிகள் படிந்து அசுத்தமாகிவிடும். கண்ணுக்கு அழுக்காகத் தெரியவில்லை என்றாலும் அது ஆபத்தானது தான். கிருமிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க் அணிவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதனைத் தினமும் துவைப்பதும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
'ஏற்கனவே கொரோனா பயம்'... 'யார் இந்த காரியத்தை செஞ்சது'... 'அதிர்ந்துபோன மக்கள்'... பரபரப்பு சம்பவம்!
தொடர்புடைய செய்திகள்
- "என்னாது...? 'செல்போன், ரூபாய் நோட்டு'ல எல்லாம்... கொரோனா, இத்தன நாட்கள் வரை உயிர் வாழுமா?!!” - அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வுத் தகவல்!
- 'சோதனைக்கு மேல் சோதனை... இப்படியே போனா... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா'!?.. சிக்கலில் கோயம்பேடு மார்க்கெட்!.. திணறும் சென்னை!
- 'இந்திய மக்களின் இதயத்தில் குடிபுகுந்த ஆம்புலன்ஸ் டிரைவர்...' '200 கொரோனா நோயாளிகளை சுமந்து சென்றவர்...' - நெகிழ்ச்சி சம்பவம்...!
- தமிழகம்: மேலும் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! சென்னையில் மொத்த பாதிப்பு, தமிழகத்தில் பலி எண்ணிக்கை! முழு விபரம்!
- 'குளிர் காலம் வந்திருச்சு... கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா'?.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
- 'இனிமே தான் சவாலான காலகட்டம்'... தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து... அமைச்சர் விஜயபாஸ்கர் 'பரபரப்பு' தகவல்!
- 'தமிழகத்தின் இன்றைய (10-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- 'சென்னையில் மீண்டும்'... 'வேகமாக அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்'... 'எந்தெந்த ஏரியாக்களில் எத்தனை தெருக்களுக்கு சீல்?!!'... 'மாநகராட்சி தகவல்!'...
- '7 மாசம் ஆச்சு'... 'பிறந்த குழந்தையை பாக்க முடியலியே'... 'பரிதவித்த வங்கி மேலாளர்'... நெகிழ வைத்த சம்பவம்!
- 'தமிழகத்தின் இன்றைய (09-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!