கிளிண்டன் - எலிசபெத் மகாராணி சந்திப்பின் போது 'அப்படி' நடந்ததா...? - '24 வருஷம்' கழிச்சு வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் கிளிண்டன் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடந்த சம்பவம் 24 வருடங்களுக்கு பிறகு நினைவுக் கூறப்பட்டுள்ளது.

1997-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது நடந்த சம்பவங்கள் என்ன என்பது குறித்து, ஆவணக் காப்பங்களில் இருந்த குறிப்புகள் மூலம் தற்போது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக டோனி பிளேர் இருந்தபோது தான் அரசுமுறை பயணமாக கிளிண்டன் இங்கிலாந்து சென்றுள்ளார். அப்போது பெரும்பாலும் தான் விருந்தினர் (Tourister) போல மட்டுமே இருக்க விரும்பியதாகவும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து அதிகாரிகள் கிளிண்டனின் அரசு பயணத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதி பல திட்டங்களை செயல்படுத்தியதாக கூறபட்டுள்ளது.

அதில் ஒன்று உணவு வகைகள். இங்கிலாந்து நாட்டில் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் அந்நாட்டின் அரிய, சுவையான உணவுகளை கொடுப்பது வழக்கம். ஆனால் பிரதமருடனான சந்திப்பின்போது எலிசபெத் மகாராணியின் டீ விருந்தை தவிர்த்துவிட்டு இந்திய உணவு வகைகளை சாப்பிட கிளிண்டன் விரும்பியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அந்த குறிப்பில் விருந்து நடைபெற்ற மெனுவை பார்க்கும்போது கிளிண்டன் சாலமன் மீன், முயல் உள்ளிட்ட வகைகளை சாப்பிட்டுள்ளார். இந்திய உணவுகளை அவர் சாப்பிடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்