'இதற்கு மேல் முடியாது!... ஆஸ்திரேலியா காட்டுத் தீ குறித்து விஞ்ஞானி எச்சரிக்கை...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவில் பற்றி எரிந்துகொண்டிருக்கும் காடுகளுக்கும், காலநிலை மாற்றத்திற்கும் தொடர்பிருப்பதாக நோபல் பரிசு பெற்ற காலநிலை நிபுணர் மைக்கேல் மான் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாகவே, கங்காருகளும் கோலா கரடிகளும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த வண்ணம் உள்ளன. உயிர்தப்பிய நிலையில் கண்களில் மரண பயத்துடன், அவை மனிதர்களை ஆரத்தழுவும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நம் கண்களை குளமாக்கி, இதயத்தை கனமாக்கும் இந்த மிகப்பெரிய தீவிபத்துக்குக் காரணம் என்ன? இதற்கு முன்பு காட்டுத் தீ ஏற்பட்டதில்லையா? இது போன்ற கேள்விகளுக்கு அமெரிக்க விஞ்ஞானி மைக்கேல் மான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ என்பது இயற்கையான நிகழ்வு தான். காட்டுத்தீ உண்டாக பல்வேறு காரணிகள் உள்ளன. இதற்கு முன்பும் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. ஆனால், இம்முறை ஏற்பட்ட அளவிற்கு சேதம் ஏற்பட்டதில்லை. அதற்கு மிக முக்கிய காரணம், "கால நிலை மாற்றம்" தான். வறட்சி, காடுகளை அழித்தல் போன்ற காரணிகளால் சிறிய அளவிலான நெருப்பு, வறண்ட மரங்களையும் புதர்களையும் பெருமளவில் எரித்து காற்று மாசை ஏற்படுத்தியுள்ளன. இது சுற்றுச்சூழல் கேடுகளை விளைவிப்பதோடு, பூமியை உயிர்கள் வாழத்தகுதியற்ற இடமாக மாற்றும் அபாயமும் உள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தை நாம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

CLIMATE, WILDFIRE, CLIMATECHANGE, AUSTRALIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்