"இதை பார்த்ததுல இருந்து சிரிப்பை அடக்கமுடியல..வா ராஜா வா".. சியான் விக்ரம் பகிர்ந்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், சியான் விக்ரம் பகிர்ந்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "காசு இல்லைன்னாலும்.. நான் இருக்கேன்".. காலணி தைப்பவரை நெகிழ வைத்த உணவு விற்பனையாளர்.. வீடியோ..!

தமிழக சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான கோப்ரா திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், விக்ரமின் நடிப்பும் அதிகம் பேசப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக தமிழ் சினிமா திரை வடிவில் காண ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதில், ஆதித்த கரிகாலன் என்னும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தின் கேரக்டர் லுக் வீடியோ வெளியானது. இதில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஸ்டாண்ட் அப் காமெடியான ட்ரெவர் நோவா தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் போது, ரிஷி சுனக் பற்றி பேசுகிறார்.

இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்டன் பகுதியில் பிறந்த ரிஷி சுனக், வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றார். 2015 ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த ரிஷி, குறுகிய காலத்தில் பல உயரங்களை அடைந்தார். போரிஸ் ஜான்சன் பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தின் நிதியமைச்சர் பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது.

இங்கிலாந்தின் பிரதமர் தேர்தலில் லிஸ் ட்ரஸ் -உடன் இறுதி சுற்றுவரையில் முன்னேறினார் ரிஷி. ஆனால், லிஸ் ட்ரஸ் அந்த தேர்தலில் வெற்றிபெற்றார். இந்நிலையில், சமீபத்தில் லிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், சியான் விக்ரம் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் ட்ரெவர் நோவா இங்கிலாந்தின் சம கால அரசியல் சூழ்நிலை பற்றி பேசுகிறார். ரிஷி சுனக் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதை கிண்டல் செய்த நோவா, காலனியாதிக்கம் குறித்தும், இங்கிலாந்தால் ஆளப்பட்ட உலக நாடுகள் பற்றியும் அந்த வீடியோவில் பேசுகிறார்.

சியான் விக்ரம் இந்த வீடியோவை பகிர்ந்து,"இதை பார்த்ததில் இருந்து என் சிரிப்பை அடக்க முடியவில்லை. சாரி, ஆனால் இதை நான் பகிர்ந்தாக வேண்டும். இந்தியா நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்காவின் துணை அதிபராக முதல் தமிழர் நியமிக்கப்பட்டார். இப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வா ராஜா வா" என பதிவிட்டு உள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | 2 ஆம் உலகப்போர் அப்போ பிரிஞ்சு போன நண்பர்கள்.. உயிரோட இருக்காங்களா-னு கூட தெரில.. 75 வருஷத்துக்கு அப்புறம் நடந்த அதிசயம்.. வீடியோ..!

CHIYAAN VIKRAM, RISHI SUNAK, UK PM RISHI SUNAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்