'ரிமோட்' காருக்குள்ள எல்லாம் செட் பண்ணி வச்சாச்சு...! அது எப்படி கடைக்குப் போய் சாமான்களை வாங்கிட்டு வருது தெரியுமா...? 'ட்ரெண்டிங்' ஆகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்ற பயத்தில் ரிமோட் கார் மூலம் கடையிலிருந்து உணவுப் பொருட்கள் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை தாண்டியுள்ளது. நோய்த் தொற்று ஏற்படும் என்பதால் அந்நாட்டு மக்கள் அடிப்படைத் தேவைக்காகக் கூட வெளியே வர பயப்படுகின்றனர்.

இந்நிலையில், ஜினான் நகரில் வசிக்கும் பெண் ஒருவர், தனது வீட்டிலிருந்து 400 மீட்டர் தொலைவிலுள்ள கடையிலிருந்து உணவுப் பொருட்களை வாங்க ரிமோட் கண்ட்ரோல் காரை பயன்படுத்தியிருக்கிறார். வீட்டில் இருந்தபடியே அவர் தன்னுடைய ரிமோட் காரில் பொருத்தப்பட்டுள்ள தன் மொபைல் ஃபோன் கேமரா மூலம் வழிகளைப் பார்த்து காரை இயக்குகிறார். இதன் மூலம் பாதுகாவலர், கடைக்காரரோடு உரையாடி தனக்குத் தேவையானவற்றையும் பெற்றுக் கொள்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் 'ட்ரெண்டிங்' ஆகி வருகிறது.

CORONOVIRUS, REMOTECAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்