'திடீரென எழுந்த அலை'... ‘ஆபத்தாக மாறிய விளையாட்டு’... 'பொழுதுபோக்கு பூங்காவில் நிகழ்ந்த விபரீதம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் உருவான செயற்கை சுனாமி தண்ணீரால், பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள ஜிலின் மகாணத்தில், லாங்ஜியாங் நகரத்தில் யூலாங் ஷூயுன் என்ற பொழுதுபோக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது. கடுமையான வெயிலில் இருந்து தப்பிக்க சுற்றுலாப் பயணிகள், இந்த பூங்காவில் தண்ணீர் நிரப்பப்பட்ட சுனாமி நீச்சல் குளத்தில் பொழுதுபோக்குவது சகஜம். இந்நிலையில் தண்ணீர் விளையாட்டுகளுக்கான இந்தப் பகுதியில் கடந்த திங்கள்கிழமையன்று ஏராளமானோர் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது செயற்கை அலைகளை உருவாக்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறால் 10 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து பலர் தூக்கி வீசப்பட்டனர்.

மேலும் தரையில் இருந்தவர்கள் மீது தண்ணீர் அடித்துக் கொண்டு சென்றது. இதனால் செய்வதறியாது திகைத்த சுற்றுலாப் பயணிகள் தப்பியோட முயற்சித்தனர். இந்த விபத்தில் 44 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், மின் துண்டிப்பால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக லாங்ஜியாங் நகர அரசு தெரிவித்துள்ளது. விபத்து நடந்ததையடுத்து ஒருநாள் மட்டும் மூடப்பட்ட இந்த பொழுதுபோக்கு பூங்கா, விசாரணைக்குப் பின்னர் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பார்ப்பவரை பதறவைத்துள்ளது.

THEMEPARK, CHINA, GIANT, AMUSEMENTPARK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்