‘ஊரடங்கை தளர்த்த முடியாமல் தவிக்கும் உலக நாடுகள்’... ‘திரும்பவும் களைக்கட்ட தொடங்கியதால்’... ‘ஒரே நாளில் வசூலை அள்ளிய சீனா’!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள சீனாவில், திரும்பவும் களைக்கட்ட தொடங்கிய சுற்றுலா தலங்களால், சீனா வசூலை அள்ளத் தொடங்கியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் உள்ள மக்களை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் முடக்கிப் போட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவில் இருந்து மிக குறுகியக் காலத்தில் மீண்ட சீனாவில், சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமார் 70 சதவிகித உள்ளூர் சுற்றுலாத் தளங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து 8 கோடியே 50 லட்சம் மக்கள், கடந்த 3 நாட்களில் சுற்றுலாப் பயணம் செய்துள்ளனர். அதிலும் இன்று ஞாயிறு என்பதால், கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு திறக்கப்பட்ட முதல் நாளில் 13 ஆயிரம் கோடி ரூபாயும், 3 நாட்களில் 37 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளது. இருப்பினும் திறந்தவெளி சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிறப்பாக 'கையாண்டு' கொரோனாவை 'வென்ற'... தென் கொரியாவின் 'நிலையே' இங்கும்... வெளியாகியுள்ள 'நிம்மதி' தரும் தகவல்...
- VIDEO: கொரோனா முன்கள வீரர்களுக்கு மரியாதை!.. பூ மழை பொழிந்த ஹெலிகாப்டர்கள்.. மனம் நெகிந்த மருத்துவர்கள்!
- ‘எக்கசக்க பாதிப்பில்’... ‘சென்னையின் இரண்டு ஏரியாக்கள்’... ஒட்டுமொத்த நிலவரம் என்ன?
- திரும்பி வந்ததும்... தெறிக்கவிட்ட 'கிம்'!.. கொரியா எல்லையில் பரபரப்பு!.. என்ன நடந்தது?
- ஒரே தெருவைச் சேர்ந்த 54 பேருக்கு கொரோனா!.. சென்னையில் வைரஸ் வேகமெடுத்தது எப்படி?.. பதறவைக்கும் பின்னணி!
- 'அமெரிக்காவை கிண்டல் செய்து சீனா வெளியிட்ட வீடியோ...' சுதந்திர சிலைக்கே கொரோனாவா? நாங்க மொதல்லயே சொன்னோம்ல, கேட்டீங்களா அமெரிக்கா...?
- கொரோனா சூழலுக்கு தகுந்தவாறு திட்டமிடுவது எப்படி?.. 'நடப்புக் கல்வியாண்டு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இல்லை!'... அதிரடியாக அறிவித்த அரசு!
- 'அபார்ட்மெண்ட்டில் ஸ்கிரீனிங்!'.. 'பால்கனியில் ஆடியன்ஸ்!'.. ஊரடங்கில் புதுமையான பொழுதுபோக்கு!
- என்ன 'அமெரிக்காவுக்கு' சப்போர்ட்டா?... "உண்டு இல்லன்னு பண்ணிடுவோம்"... கடுமையாக 'எச்சரித்த' சீனா!
- 'இனிமேல் சின்ராச கையிலயே பிடிக்க முடியாது'... 'ஜாலி மூடில் சீனர்கள்'...ஓஹோ இது தான் காரணமா!