LKG லேயே இப்படி ஒரு Training-ஆ... சீன சுட்டிக் குழந்தைகள் அசால்ட்டாக செய்யும் உடற்பயிற்சி.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் சின்னஞ்சிறு பள்ளி குழந்தைகள் வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read | "இது மீன்தானா? என்ன இப்படி இருக்கு.?".. மீனவர் போட்ட வித்தியாசமான புகைப்படம்.. ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..!
இன்றைய நவீன உலகில் உடற்பயிற்சியின் அவசியத்தை அறிந்திருந்தாலும், பல்வேறு காரணங்களினால் அவற்றை தொடரமுடியாமல் மக்கள் தவிக்கின்றனர். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது உடலை மட்டுமல்லாது மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், வேலைப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என பெரும்பாலானோர் கூறுவதை கேட்டிருப்போம்.
அதனாலேயே உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர, பள்ளிகளில் விளையாட்டுக்கென தனியாக நேரம் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில் சுட்டிக் குழந்தைகள் வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
வைரல் வீடியோ
நார்வேயின் முன்னாள் தூதர் எரிக் ஸ்லோஹேம் (Erik Solheim) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 5 முதல் 6 வயதுடைய கிண்டர்கார்டன் குழந்தைகள் வினோதமான உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்கள். நேரான வரிசையில் தரையில் கால்நீட்டி அமர்ந்திருக்கும் இந்த சுட்டிகள், இரு கைகளிலும் பந்துகளை பிடித்திருக்கின்றனர்.
அவற்றை தரையில் தட்டி, அவை மேலெழும் இடைவேளையில் தங்களது கால்களை அனாயசமாக நகர்த்துகின்றனர். இதில் எந்த குழந்தையும் பந்தை தவறவிடவில்லை. மிகவும் துல்லியமாக பந்துகளை கையாளும் இந்த குழந்தைகள் கை மற்றும் கால் அசைவுகளையும் மேற்கொள்கின்றனர். இதுபற்றி எரிக்,"கிண்டர்கார்டனில் உடற்பயிற்சி வகுப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிஞ்சா
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவவே நெட்டிசன்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். அதில்,"இவர்கள் குட்டி நிஞ்சாக்கள்" என்றும், "சுய ஒழுக்கத்தை மேம்படுத்த சிறந்த வழி" என்றும்," சீனா ஒலிம்பிக்கில் எப்படி அதிக அளவில் தங்கம் வெல்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது" என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர் மக்கள்.
இந்த வீடியோ இதுவரையில் 74,000 முறை பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், 1,400 பேர் இதனை லைக் செய்துள்ளனர். சிறுவயது குழந்தைகள் வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்யும் விதம் பலரையும் ஈர்த்திருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்