ரகசிய தகவல்கள் லீக்.. அமெரிக்காவுக்கே Tough கொடுத்த சீன உளவாளி.. நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரகசிய தகவல்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சீன உளவாளிக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | இந்த Resume எப்படி செலக்ட் ஆகாம போகும்னு பாக்குறேன்.. கூகுளில் வேலைக்காக இளைஞர் உருவாக்கிய அடடே Resume.. வைரலாகும் Pic..!

உலகின் முன்னணி விமான எஞ்சின் உற்பத்தியாளர்களில் ஒன்றான GE Aviation மற்றும் என்ஜின் மேம்பாட்டில் GE உடன் இணைந்து பணியாற்றிய பிரான்சின் Safran குழுமத்தின் வணிக ரகசியங்களை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டவர் சூ யான்ஜுன் (Xu Yanjun). 42 வயதான சூ, சீனாவின் மாநில பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றியவர் என அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் நாடு கடத்தப்பட்ட சூ, ஒஹியோவின் சின்சினாட்டியில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் இரண்டு FBI அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதன்மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் பொருளாதார உளவு முயற்சி, வர்த்தக ரகசிய திருட்டு முயற்சி மற்றும் இரண்டு சதி குற்றச்சாட்டுகள் ஆகியவை சூ மீது சுமத்தப்பட்ன.

இதனையடுத்து இந்த வழக்கில் சூ-விற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக சின்சினாட்டி ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஓஹியோ பெடரல் வழக்கறிஞர் கென்னத் பார்க்கர்,"இந்த வழக்கு ஒரு தெளிவான செய்தியை கொடுத்திருக்கிறது. அமெரிக்க வர்த்தக ரகசியங்களைத் திருட முயற்சிக்கும் எவருக்கும் நாங்கள் தக்க பதிலை அளிப்போம் என்பதுதான் அது" என்றார்.

சூ, குறிப்பிட்ட சில உயர் அதிகாரிகளை சீனாவுக்கு பயணம் செய்ய முயற்சித்ததும், சீனாவுக்காக முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தகவல்களை திருட முயற்சித்தும் விசாரணையில் புலனாவதாக சின்சினாட்டி ஃபெடரல் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் சூ, மீதான குற்றச்சாட்டுகளை "தூய்மையான கட்டுக்கதை" என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | கதவை உடைச்சு உள்ள போய் தோடை மட்டும் தூக்கிட்டு போன பலே திருடர்கள்.. ஒருநிமிஷம் குழம்பிப்போன போலீஸ்..!

CHINESE, JAIL, US, SECRETS, CHINESE SPY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்