விண்வெளியில் விளைந்த அரிசி.. சாதித்து காட்டிய சீன விஞ்ஞானிகள்.. வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அவ்வப்போது விண்வெளி மற்றும் வான் உலகில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு நடைபெறுவதும், அதுகுறித்து வெளியாகும் விஷயங்களும் மக்கள் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தும்.

Advertising
>
Advertising

அந்த வகையில், தற்போது சீன விஞ்ஞானிகள் செய்துள்ள விஷயம், பலரையும் வியக்க வைத்துள்ளது.

விண்வெளியின் சுற்றுவட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சீனா பணியாற்றி வருகிறது.

இதனிடையே, கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில் பூஜ்ய புவிஈர்ப்பு விசை கொண்ட வென்சியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்கான பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய நிலையில்,  தாலே கிரஸ் மற்றும் அரிசி வகை ஆகிய இருவகை செடியை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

இதில், தாலே கிராஸ் 4 இலைகளை உற்பத்தி செய்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அரிசி விதை, சுமார் 30 செ.மீ உயரத்திற்கு வளர்ந்து விஞ்ஞானிகள் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. விண்வெளியில் கதிரியக்கங்கள் அதிகம் இருக்கும் என்பதால், இங்கே தாவரங்கள் எப்படி நடந்து கொள்கின்றன என்பது பற்றி அறிந்து கொள்ள சீன விஞ்ஞானிகள் இந்த அறிவியல் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விண்வெளியில் தாவர விதைகள் பரிசோதனையில் சீனா ஈடுபடுவது இது முதல் முறை கிடையாது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், விண்வெளியில் இருந்து திரும்பி கொண்டு வந்த விதைகளை வைத்து முதல் தொகுதி அரிசியை அறுவடை செய்தது. சொர்க்கத்தில் இருந்து வந்த அரிசி என பெயரிடப்பட்ட இந்த வகை அரிசிக்கான 40 கிராம் விதைகள், 7.6 லட்சம் கி. மீ தொலைவுக்கு நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு பூமிக்கு திரும்பி கொண்டு வரப்பட்டது.

அப்படி ஒரு சூழ்நிலையில் தற்போது விண்வெளியில் அரிசி விதை வளர்ந்துள்ள விஷயம் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதிக கதிரியக்கங்கள், புவி ஈர்ப்பு விசையற்ற சூழல் போன்ற சுற்றுசூழலில், விண்வெளியில் சீன விஞ்ஞானிகள் அரிசியை உற்பத்தி செய்து இருப்பது, விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த கட்டமாக உற்று நோக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

RICE, CHINA, SPACE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்