ஸ்கூல்ல நல்லா படிச்சா 'இந்த' மிருகக்குட்டி பரிசா கிடைக்குமாம்..!- மாணவர்களை உற்சாகப்படுத்தும் விநோத திட்டம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் உள்ள பின்தங்கிய ஓர் கிராமப் பகுதியில் இயங்கும் பள்ளியானது, தங்களிடம் படிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்த வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்து உள்ளனர்.
அதாவது பொருளாதார ரீதியாக இன்னும் முன்னேற்றம் பெறாத அந்தப் பகுதியில், பள்ளியில் பயிலும் மாணவர்கள் நன்றாக கல்வி கற்க வேண்டும் என்றும், அதன் மூலம் உள்ளூர் பொருளாதார நிலை மாற வேண்டும் என்ற நோக்கிலும் பள்ளி நிர்வாகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பன்றிக் குட்டிகளை பரிசாக அளித்து சிறப்பித்து வருகிறது.
யுனான் பிராந்தியத்தில் உள்ள இலியாங் பகுதியில் அமைந்துள்ள சிங்யாங் ஆரம்பப் பள்ளிதான் இந்த வித்தியாச முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதுவரை கல்வியில் சிறந்து விளங்கிய 20 மாணவர்களுக்குப் பன்றிக் குட்டிகள் பரிசாக கொடுக்கப்பட்டு உள்ளன.
ஷாங்காய் சியாங்வூ பொது நலத் திட்டம் மூலம், சீனாவின் கிராமப்புற பொருளாதாரத்தை வளர்க்க நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியில் இருந்துதான் இந்தப் பன்றிக் குட்டிப் பரிசுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது சிங்யாங் ஆரம்ப பள்ளியில் வெறும் 65 மாணவர்கள் மட்டுமே படித்து வருகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இப்படி பன்றிக் குட்டிகளை பரிசாக கொடுப்பது சீனாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பலரும், ‘பன்றிக் குட்டிகளைப் பரிசாக வாங்கிய குழந்தைகளின் பெற்றோர்கள், அவர்களை நினைத்துப் பெருமிதம் கொள்ள வேண்டும். மிகவும் சிறய வயதிலேயே அந்தக் குழந்தைகள் இப்படி தங்கள் குடும்பத்துக்காக பன்றிகளை வருமானமாக ஈட்டித் தந்துள்ளனர்.
உண்மையில் கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு மாணவருக்கு சான்றிதழ் கொடுப்பதைவிட இதைப் போன்ற பரிசுகள் அதிக பயன் தரும். குறிப்பிட்ட அந்தக் குடும்பங்கள், பன்றிகள் மூலம் மாணவர்களின் கல்விக்காக புத்தகங்களை வாங்கித் தர முடியும்’ என்று கருத்து கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நல்ல குடிக்கலாம்.. சாப்பிடலாம்... என்ஜாய் பண்ணலாம்... அசர வைக்கும் பட்டப்படிப்பு!
- ஒரே உத்தரவு.. பள்ளி கல்வித்துறைக்கு சபாஷ்.. மிகப்பெரிய சாதனை படைத்த அரசு பள்ளிகள்!
- ‘சாரை போக விடமாட்டோம்’.. கட்டிப்பிடித்து ‘கதறியழுத’ மாணவர்கள்.. பெற்றோர்கள் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!
- பள்ளிகள் விடுமுறை.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.. மாணவர்கள் செம ஹேப்பி அண்ணாச்சி..
- 'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்'!.. அதிரடி திட்டத்தை கையிலெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!.. பின்னணி என்ன?
- தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு?.. உயர் அதிகாரிகள் அவசர மீட்டிங்!.. முழு விவரம் உள்ளே
- உங்க குழந்தைகள 'இந்த ஸ்கூல்ல' ஜாயின் பண்ணுங்க...! இதனால குழந்தைகளுக்கு மட்டும் இல்ல, உங்களுக்கும் ஒரு சூப்பர் ஆஃபர் இருக்கு...' - அதிரடி அறிவுப்புகளை வெளியிட்ட அரசுப் பள்ளி...!
- கொதித்து எழுந்த முன்னாள் மாணவிகள்!.. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலம்!.. சிவசங்கர் பாபா வழக்கில் மேலும் பலருக்கு வலைவீச்சு!
- +2 பொதுத் தேர்வு ரத்து செஞ்சுட்டா போதுமா?.. மாணவர்கள் எதிர்காலம் என்ன?.. உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!.. மத்திய அரசின் திட்டம் 'இது' தான்!
- 'மொட்ட மாடியில ஒரே சத்தமா இருக்கேன்னு திரும்பி பார்த்தா...' 'தமிழக முதல்வருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரியர் மாணவர்கள்...' - முதல்வரை வரவேற்ற மாணவர்கள்...!