'விண்வெளியில கன்ட்ரோல் இல்லாம சுத்திட்டு இருந்த சீன ராக்கெட்...' 'இன்னைக்கு பூமிக்குள்ள என்ட்ரி ஆகப் போகுதாம்...' - எங்க விழுறதுக்கு வாய்ப்பிருக்கு...?
முகப்பு > செய்திகள் > உலகம்கட்டுபாட்டை இழந்த 110 அடி உயரமுள்ள சீன ராக்கெட் இன்று பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ராக்கெட்டின் மொத்த எடை 22 மெட்ரிக் டன் ஆகும். இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த தகவலில், "பூமியின் வளிமண்டலத்தில் ராக்கெட் நுழைய போகும் நேரத்தை உறுதியாக கூற முடியாது. ஆனாலும் சீனா அனுப்பிய லாங் மார்ச் 5 பி ராக்கெட் கடலில் விழுவதற்கு தான் அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி பாதுகாப்பு கூட்டணியின் நிறுவனர் டான் ஓல்ட்ரோஜ் இதுப்பற்றி கூறுகையில், "பூமியின் பெரும்பகுதி தண்ணீரில் மூடியுள்ளது, எனவே ஆபத்து ஏற்பட வாய்புகள் மிக குறைவு . மனிதர்கள் இதனால் அச்சம் கொள்ள தேவையில்லை" என கூறியுள்ளார்.
பூமத்திய ரேகையிலிருந்து 41.5 டிகிரி சாய்வில் இந்த ராக்கெட் பூமியை குறுக்காகச் சுற்றி வருகிறது, அதாவது இது பூமியின் பெரும்பகுதியைக் கடந்து செல்கிறது, அதாவது சிலி மற்றும் தெற்கே நியூசிலாந்தின் மேல் பாதி வரை கடந்து சுற்றுகிறது.
ஒருவேளை இந்த ராக்கெட்டால் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கு சீனா இழப்பீட்டு பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில், சீனாவின் முதல் முன்மாதிரி விண்வெளி நிலையம், தியாங்காங் -1, கட்டுப்பாடில்லாமல் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து பசிபிக் கடலில் விழுந்தது. வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு விண்வெளி நிலைய திட்டத்தை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், சீனா தனது விண்வெளி நிலைய திட்டத்தில் வரும் வாரங்களில் அதிக ராக்கெட்டுகளை அனுப்பும் பணியில் வேகமெடுக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கன்ட்ரோல் மிஸ் ஆயிடுச்சு...! 'கண்டிப்பா அடுத்த சில நாட்களில்...' - விண்வெளிக்கு சென்ற லாங் மார்ச் 5பி குறித்து வெளிவந்துள்ள அதிர வைக்கும் தகவல்...!
- யாருக்காவது சுவாச பிரச்சனை இருந்தா வெளிய வராதீங்க...! 'ஒரு நகரமே மஞ்சள் நிறமா மாறி போச்சு...' என்ன காரணம்...? - அச்சத்தில் சீன மக்கள்...!
- ஆசை ஆசையாக ‘ஐபோன்’ வாங்கிய இளம்பெண்.. ‘சரி பாக்ஸை ஓபன் பண்ணுவோம்’.. காத்திருந்த அதிர்ச்சி..!
- VIDEO: 'சிட் அப்ஸ் பண்ற இடமா அது...' 'என்ன தான் உடல் மேல அக்கறை இருந்தாலும்...' 'அதுக்காக இப்படியா...' - வைரல் வீடியோ...!
- 'டைவர்ஸ் கொடுங்க சார்...' 'தரேன், ஆனா மொதல்ல இத பண்ணுங்க...' - வித்தியாசமான தீர்ப்பை கேட்டு ஆடி போன கணவன்...!
- ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ’!.. Ex-boyfriend-யை ‘பழி’ வாங்க இளம்பெண் போட்ட ப்ளான்.. மிரண்டுபோய் நின்ற இளைஞர்..!
- 'ஆண் மாணவர்கள் அதிக பெண் தன்மையுடன் இருக்காங்க'... 'விவாதத்தை கிளப்பிய சுற்றறிக்கை'... கொந்தளித்த நெட்டிசன்கள்!
- 'திடீரென மஞ்சள் நிறமாக மாறிய நபர்'... 'பதற்றத்துடன் மருத்துவமனைக்கு விரைந்த சொந்தங்கள்'... நோயாளியை பார்த்ததும் மருத்துவர் கேட்ட ஒரே கேள்வி!
- 'கல்யாணமா?.. அதெல்லாம் டைம் வேஸ்ட்!'.. 'சிங்கிள் தான் கெத்து'!.. 30 வயதிலும் ரவுசு செய்யும் இளசுகள்!.. விரக்தியில் அரசாங்கம்!
- ‘பிரிட்டனின் கடல் கடந்த பாஸ்போர்ட் இனி செல்லாது: சீனா’!.. ‘பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை ரத்து செய்த நாடுகள்!’.. ஐரோப்பா வந்து செல்லும் ‘மூளைக்கார’ பயணிகள்! ஏன் தெரியுமா?