"தர்ப்பூசணி பழத்தை கொடுத்து வீடு வாங்கலாம்".. மக்களை ஷாக்-ஆக வச்ச நிறுவனம்.. ஓஹோ இதுதான் விஷயமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, தர்பூசணி பழங்களை முன்பணமாக பெற்றுக்கொண்டு வீடுகளை விற்க இருப்பதாக அறிவித்திருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "நல்லா படிங்க.. ஒரு டிகிரி போதும்னு நெனைக்காதீங்க..கல்வி தான் நம்ம சொத்து".. பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!

வீடு விற்பனை

சீனாவில் இயங்கிவரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சமீப ஆண்டுகளாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனையடுத்து உள்ளூர் விவசாயிகளை ஈர்க்கும் விதத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அனைவரையும் திகைக்க வைத்து வருகின்றன சில நிறுவனங்கள். முன்னதாக கோதுமை, பூண்டு ஆகியவற்றை முன்பணமாக செலுத்தி வீடுகளை பெற்றுக் கொள்ளலாம் என சில நிறுவனங்கள் அறிவித்திருந்தன. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த வகையில் சீனாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, தர்பூசணி பழங்களை முன்பணமாக கொடுத்து வீடுகளை புக் செய்யலாம் என அறிவித்திருந்தது. சீனாவில் ஒரு கிலோ தர்ப்பூசணி பழம் 20 யுவான்களுக்கு விற்கப்படுகின்றன. ஆகவே அதிகபட்சமாக 5000 கிலோ தர்ப்பூசணி பழங்களை கொடுத்து (அதன் மதிப்பான 100,000 யுவான்கள்) வீட்டினை முன்பதிவு செய்யலாம் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது அந்த விளம்பரங்களை முற்றிலுமாக நீக்கியுள்ளது அந்நிறுவனம்.

கைவிடப்பட்ட திட்டம்

ஜூன் 28 முதல் ஜூலை 15 ஆம் தேதிவரையில் விவசாயிகள் தர்ப்பூசணி பழங்களை கொடுத்து வீட்டினை முன்பதிவு செய்யலாம் என அந்த நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது. ஆனால், இந்த விளம்பரங்களை நீக்குமாறு அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டதாக தெரிகிறது.

சீனாவில் சுமார் 27 சதவீத வங்கிக் கடன்கள் ரியல் எஸ்டேட் தொடர்பானவை. இந்நிலையில் வீட்டு வசதி கடன்கள் 10 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் வீட்டுக் கடன்கள் வாங்குவதில் சிரமமான சூழ்நிலை சீனாவில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூன்றாம் மற்றும் நான்காம் அடுக்கு நகரங்களில் வீட்டுக்கடன் வாங்குவது கணிசமான அளவில் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. அதன் காரணமாகவே, விவசாயிகளை ஈர்க்க இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்.

Also Read | அடடே இந்த ஐடியா செம்மயா இருக்கே.. காலி பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை கொடுத்தால் மாஸ்க் கொடுக்கும் மெஷின்..!

CHINESE, CHINESE REAL ESTATE DEVELOPERS, WATERMELONS, தர்ப்பூசணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்