VIDEO: ‘இதுதான் நீங்க பயங்கரவாதத்துக்கு எதிரா போராடுன லட்சணமா?’.. 3 நிமிஷ வீடியோவில் அமெரிக்காவை பங்கமாய் ‘கலாய்த்த’ சீனா.. கிளம்பிய புது சர்ச்சை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தங்களது படைகளை திரும்ப பெற்றதை சீன ஊடகம் கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: ‘இதுதான் நீங்க பயங்கரவாதத்துக்கு எதிரா போராடுன லட்சணமா?’.. 3 நிமிஷ வீடியோவில் அமெரிக்காவை பங்கமாய் ‘கலாய்த்த’ சீனா.. கிளம்பிய புது சர்ச்சை..!

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும், தாலிபான்கள் அமைப்புக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகளாக போர் நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்தன. இந்த சூழலில் ஆப்கான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எண்ணியது. அதன்படி தாலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

Chinese media mocks US over its 20-year stint in Afghanistan

இதனை அடுத்து ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆப்கானின் முக்கிய நகரங்களை வேகமாக தாலிபான்கள் கைப்பற்ற தொடங்கினர். கடைசியாக தலைநகர் காபூலும் தாலிபான்கள் வசம் வந்தது.

Chinese media mocks US over its 20-year stint in Afghanistan

இதனை அறிந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். அதேபோல் அந்நாட்டு மக்களும் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையங்களுக்கு படையெடுத்தனர். இதில் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.

இந்த நிலையில் சீனாவின் ஷினுவா செய்தி ஏஜென்சி (China Xinhua News) அமெரிக்காவை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ‘வாழ்க்கை எங்கும் நகரவில்லை என்று நீங்கள் உணரும்போது, சிந்தித்துப் பாருங்கள். ஆப்கானிஸ்தான் தாலிபான்களிடமிருந்து மீண்டும் தாலிபான்களுக்கே வந்து விட்டது.

4 அமெரிக்க அதிபர்கள், 20 ஆண்டுகள், 2 டிரில்லியன் டாலர்கள், 2400 ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு பின் மீண்டும் ஆப்கானிஸ்தான் ஆட்சி தாலிபான்களுக்கே வந்து விட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அமெரிக்கா கூறியது, ஆனால் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில் ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கமாக அதிகரித்து 20-ஐ கடந்துள்ளது.

1 லட்சம் ஆப்கான் குடிமக்கள் கொல்லப்பட்டனர், 1 கோடிக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்தப் போரினால் 60 மில்லியன் டாலர்கள் நாளொன்றுக்கு செலவானது. வியட்நாம் போரை விட மலை விழுங்கியாக இது உள்ளது’ என அமெரிக்காவை கிண்டல் செய்து சீன ஊடகம் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்