'உலகமே நம்ம மேல காண்டுல இருக்கு'... 'இதுல நீங்க வேற'...சீன இளைஞருக்கு கிடைத்த அதிரடி தண்டனை!
முகப்பு > செய்திகள் > உலகம்வெளிநாடு சென்று வந்ததை மறைத்து, தனிமையில் இருக்காமல், கொரோனா சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்த இளைஞருக்கு சீன அரசு அதிரடி தண்டனையை வழங்கியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு உலகம் முழுவதும் 58 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவுக்கு அந்நாட்டிலும் 3 ஆயிரத்து 322 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சீனாவில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு அங்கு கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தற்போது நிலைமை சீரடைந்து வருவதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவின் ஹேனன் மாகாணம் ஜெங்ஜோ நகரை சேர்ந்த ஜிய் என்ற இளைஞர், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வெளிநாடு சென்றுள்ளார். ஆனால் சீனாவிற்கு திரும்பிய பின்னர் தான் வெளிநாடு சென்று வந்த விவரங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. கொரோனா அச்சுறுத்தலில் இருத்தலில் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்திய சுய தனிமைப்படுத்துதலையும் அவர் கடைபிடிக்கவில்லை. மாறாக வெளிநாட்டில் இருந்து திரும்பிய அடுத்த நாளே (மார்ச் 8) தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அலுவலகம் சென்ற அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிய அந்த பகுதியை சேர்ந்த காவல்துறையினர் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர் செல்போன் அழைப்பை ஏற்காமல் தனது தாயாரிடம் போனை கொடுத்துள்ளார். ஜிய்யின் தாயார் தனது மகன் வெளிநாடு திரும்பிய தகவல் மட்டுமல்லாமல் மகனுக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறிகள் குறித்த தகவலையும் காவல்துறையினரிடம் இருந்து மறைத்துள்ளார்.
இதற்கிடையே சில நாட்களிலியே ஜிய்-க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 40 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து வெளிநாடு சென்று திரும்பிய தகவலை மறைத்தது, சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படாதது, கொரோனா அறிகுறிகள் இருந்த போது தானாக முன்வந்து சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காதது ஆகிய குற்றங்களுக்காக ஜிய் மீது வழக்கு தொடர்ப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனா பரவ சீனா தான் காரணம் என உலக நாடுகள் பலவும் குற்றம் சாட்டி வரும் நிலையில், சீனா இளைஞர் செய்துள்ள செயல் அங்குள்ள அதிகாரிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இரண்டாம் உலகப் போரையே பார்த்தாச்சு’... ‘கொரோனா எல்லாம் நமக்கு’... ‘மீண்டு வந்து’... ‘104-வது பர்த்டே கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர்’!
- ‘10 பேருக்காவது கால் பண்ணுங்க’.. ‘அவங்கள வீட்ல இருக்க சொல்லுங்க’.. கொரோனாவில் இருந்து பாதுகாக்க முதல்வர் ட்வீட்..!
- 'கேஸ் சிலிண்டர்' விநியோகிக்கும் ஊழியர்களுக்கு 'பாத பூஜை'... 'மஞ்சள் நீரால்' கழுவி, சந்தனம், குங்குமம் இட்டு 'நன்றி'... 'உரிமையாளர்' செய்த 'வியக்க வைக்கும்' செயல்...
- 'ஆட்டை கசாப்பு கடைக்கு கொண்டு போவாங்கல'...'கதறிய பெண் மருத்துவர்'... அதிரவைக்கும் காரணம்!
- 'கொரோனா' பாதிக்கப்பட்ட ஒரு 'நோயாளிக்கு...' 'ஒரு நாளைக்கு' ஆகும் 'மலைக்க வைக்கும்' செலவு... 'கேரள சுகாதாரத்துறை அறிவிப்பு...'
- ‘தமிழகத்தில் 411 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு’... ‘நாம் எந்த கட்டத்தை அடைந்துள்ளோம்’... 'சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்’!
- மூடப்பட்ட 'ஆட்டிறைச்சி' கடைகள்... சிக்கனுக்கு வந்த 'திடீர்' கிராக்கி... வெலைய பார்த்தாலே 'ஷாக்' அடிக்குதே!
- கொரோனா ஊரடங்கால் ‘குவியும் ஆர்டர்கள்’.. 10,000 பேரை வேலைக்கு எடுக்கும் ‘பிரபல’ நிறுவனம்..!
- 'நமக்கு புடிச்சவங்கள கடைசியா ஒரு தடவ பார்க்க முடியாதது எவ்வளவு கொடுமை!?'... மரணத்தை மிஞ்சிய வலிகளைக் கொடுக்கும் கொரோனா!... இதயத்தை நொறுக்கும் சோகம்!
- ‘எல்லாத்துக்கும் சீனாவோட’... ‘அந்த மார்கெட் தான் காரணம்’... ‘அதனை க்ளோஸ் பண்ண’... 'ஐ.நா., WHO -க்கு’... ‘கொந்தளித்த பிரதமர்’!