இளைஞருக்கு ஏற்பட்ட மாதவிடாய்... அதிர்ந்துபோன டாக்டர்கள்... ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்ட நிலையில், அவருக்கு கருமுட்டை மற்றும் கருப்பை இருப்பது தெரியவந்திருக்கிறது.
Also Read | இலங்கை அதிபர் மாளிகைல இருந்த ரகசிய அறை.. கத்தை கத்தையா பணத்தை பார்த்து திகைச்சு போன போராட்டக்காரர்கள்..!
சீனாவின் சிசுவான் என்ற பிராந்தியத்தை சேர்ந்த 33 வயதான நபர் ஒருவருக்கு கடந்த 20 வருடங்களாக சிறுநீரக சிக்கல் இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவரது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரண சிறுநீரக தொற்று இருப்பதாக நினைத்திருக்கிறார் அவர். ஆனால், பரிசோதனை செய்யும்போது தான் உண்மை தெரியவந்திருக்கிறது.
சிகிச்சை
கடந்த 20 ஆண்டுகளாக அவருக்கு இதே தொந்தரவு இருந்திருந்திருக்கிறது. சிறுநீரக பிரச்சனை எனக் கருதி இதற்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு உடல் நல பிரச்சனை அதிகரிக்கவே, மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு பெண் பாலினத்தின் க்ரோமோசோம்கள் உடலில் உள்ளதாகவும். எனவே, இவருக்கு கருமுட்டை, கருப்பை போன்ற உறுப்புகள் உடலில் உள்ளதால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் ஏற்படுகிறது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனை, மருத்துவர்கள் இன்டர்செக்ஸ் என்று அழைக்கின்றனர். இந்த அரிதான மருத்துவத்தன்மை கொண்டவர்களுக்கு அவர்களின் பாலினம் மட்டுமல்லாது எதிர் பாலினத்தின் க்ரோமோசோம்கள் மற்றும் உறுப்புகளும் இருக்கும். இந்த பாதிப்பு 2000 பேரில் ஒருவருக்கு தான் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கோரிக்கை
ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளி விவரத்தின் படி, உலக மக்கள் தொகையில் 0.05 முதல் 1.7 சதவீத பேருக்கு இந்த பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்நிலையில், தனது உடலில் உள்ள பெண் உறுப்புகளை அகற்றுமாறு மருத்துவர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் அந்த இளைஞர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது.
3 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையில் இளைஞர் உடலில் இருந்த கருமுட்டை மற்றும் கருப்பை ஆகியவற்றை நீக்கியிருக்கிறார்கள் மருத்துவர்கள். அதன்பின்னர் 10 நாள் சிகிச்சைக்கு பிறகு அந்த இளைஞர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த சிகிச்சை காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம் எனத் தெரிவித்திருக்கும் மருத்துவர்கள் தொடர்ந்து அந்த இளைஞருக்கு ஆலோசனைகள் வழங்கிவருவதாக கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்