‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. ‘கொரோனாவுக்காக’ கட்டிய ஆஸ்பத்திரியை மூடப்போறோம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் குணமாகியுள்ளதால் சிறப்பு மருத்துவமனையை மூடப்போவதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்துதான் முதல்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறித்த வீரியம் தெரிவதற்குள் சீனாவில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கொரோனா வைரஸால் சீனாவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வுகான் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 9 நாட்களில் சுமார் 1000 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையை சீனா அரசு கட்டியது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்த வுகான் மாகாணத்தில் சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
இந்த நிலையில் வுகான் நகரில் கட்டப்பட்ட சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால் கொரோனா நோயாளிகளுக்காக கட்டிய சிறப்பு மருத்துவமனை மூடப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மற்றொரு 'வுஹானாக' மாறும் 'அபாயத்திலுள்ள' நகரம்... மீண்டும் 'அதிகரிக்க' தொடங்கியுள்ள பாதிப்பால் 'அச்சம்'...
- ‘கொரோனாவால்’ இறந்தவர்களை ‘குணமடைந்தோர் பட்டியலில்’ சேர்க்கும் நாடு!.. அதுக்கு அவங்க சொன்ன ‘வேறலெவல் காரணம்!’
- கொரோனா அச்சமின்றி பார்ட்டியில் ஆட்டம் போட்ட கும்பல்!.. வீடியோ வெளியானதால்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
- ‘தமிழகத்திலும்’... ‘கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை?’... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் தந்த அதிரடி பதில்’!
- “சும்மா இருமிக்கிட்டே இருக்க? கொரோனா வந்துடுச்சுனா?”.. நண்பனை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்!
- ‘கொரோனா வைரஸ் பாதிப்பு’... ‘சுற்றுலாப் படகு இல்லங்களையும்’... 'கேரள அரசின் அடுத்த அதிரடி திட்டம்’!
- கொரோனா 'ஹாட் ஸ்பாட்' பட்டியலில் உள்ள 'தமிழக' மாவட்டங்கள் எவை?... மத்திய அரசு 'அறிவிப்பு'...
- 13 நாட்களில் 5 கோடி டவுன்லோடுகளை கடந்த ஆரோக்கிய சேது ஆப்! || இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகள் - சுகாதாரத்துறை ||
- நாட்டையே 'நிலைகுலைய' வைத்துள்ள கொரோனா... 'சிக்கி' தவிக்கும் 'இந்தியர்களுக்கு' வெளியாகியுள்ள 'நிம்மதி' தரும் செய்தி...
- 'கொரோனாவால் எகிறிய விவாகரத்து'...'அதையே பணமாக்க நிறுவனம் போட்ட ஐடியா'... அத கேட்டா நீங்களே கடுப்பாவிங்க!