'போங்க போங்க... உங்களுக்கெல்லாம் இங்க சாப்பாடு கிடையாது...!' போர்டு மாட்டிய ஹோட்டல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீன நாட்டவர்களுக்கு உணவு கிடையாது என்று இலங்கையில் உள்ள உணவகம் ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீன மக்களுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பில் உள்ள உணவகம் ஒன்று கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 7000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலக நாடுகள் பலவற்றிலும், கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சமீபத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தார். இதனால் சீன நாட்டவர்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொழும்பில் உள்ள உணவகம் ஒன்று சீனர்களுக்கு புதுக்கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது, "சீன மக்களுக்கு இங்கே உணவு வழங்கப்பட மாட்டாது" என்ற அறிவிப்பு பலகை அந்த ஓட்டல் நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மருத்துவக் கழிவுகளுடன் சீனக் கப்பல்...!' சென்னை நோக்கி வருகிறதா..? ஒருவேளை கப்பலை அனுமதித்தால்... அதிகாரிகள் தீவிர ஆலோசனை...!
- “அசைவத்தால் பரவும் கொரோனா வைரஸ்!” .. “2 மணி நேரம்தான் இருக்கு!”.. “பதறும் இந்திய மாணவர்!”.. பதட்டத்தின் உச்சத்தில் வுஹான்!
- கொரோனா வைரஸ்: 'பிரச்சனை முடியுறதுக்காக தான் வெயிட் பண்றோம்...' இந்திய மாணவர்களை கொண்டுவர 'போயிங் 747' விமானம் ரெடி... சிறப்பு தகவல்கள்...!