'குணமடைந்தவர்களின் உடலில் தான்... கொரோனாவுக்கான மருந்து உள்ளதா!?'... சீன மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவைக் குணமாக்க சீனா புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
கொரோனாவால் உலக நாடுகள் உயிர் மற்றும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்து வருகிறார்கள். இந்த கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டறிய உலக நாடுகள் பல தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், கொரோனா உருவான இடமான சீனா புதியதொரு முயற்சியை தொடங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமானவர்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மூலம் சிகிச்சை தருவதுதான் அந்த நடைமுறை.
இதனால், குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அணுக்களை பிரித்தெடுத்து அது சிகிச்சை தேவைப்படுபவரின் உடலில் செலுத்தப்படும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவரின் உடலில் அவ்வைரஸுக்கு எதிரான எதிர் உயிர்கள் வளர்ந்திருக்கும் என்றும் இவை மற்றவர்களை குணப்படுத்த உதவியாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை தர அமெரிக்க மருத்துவர்களும் அந்நாட்டு மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலை கோரியுள்ளனர். இது மிகப்பழங்கால நடைமுறைதான் என்றும் பல்வேறு தொற்று நோய்களுக்கு சிகிச்சை தர இம்முறை வெகுவாக பயன் தந்துள்ளதாகவும், வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஜாஃப்ரி ஹெண்டர்சன் கூறியுள்ளார். எனினும் இந்த முறை கொரோனாவை குணப்படுத்த எந்தளவு உதவும் என்பது பரிசோதனைகளுக்கு பின்பே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “18 வயது இளைஞர் உட்பட.. தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா! இதுல 2 பேருக்கு”.. அமைச்சர் சொன்ன புதிய தகவல்!
- 'கொரோனாவை' கட்டுக்குள் கொண்டுவர... '123 ஆண்டுகள்' பழமையான சட்டம்... எதெல்லாம் 'செய்யக்கூடாது' தெரியுமா?
- 'இந்த' இரண்டு நாட்களுக்கு 'கோயம்பேடு' மார்க்கெட் இயங்காது... என்ன காரணம்?
- ‘நாங்க நினச்ச மாதிரி இது இல்ல’... அசுர வேகத்தில்... புல்லட் ரயில் போல நியூயார்க் நகரில் கொரோனா பரவுது’!
- 'ஸ்பெயினை துடைத்து எடுக்கும் துயரம்'... ‘ஒத்துழைக்காத மக்களால் நடக்கும் விபரீதம்’... ‘லாக் டவுனை நீக்கிய சீனாவை மிஞ்சிய கோரம்’!
- "டிரைவர் அண்ணே...!" "தம்பிக்கு உங்க சீட்ல பாதி இடம் குடுங்கண்ணே..." 'சொந்த ஊருக்கு' போக முட்டி மோதிய 'இளைஞர்கள்...' '2 நாட்களில்' பயணம் செய்தவர்களின் 'அசர வைக்கும்' எண்ணிக்கை...
- 'கொரோனா' என்னும் 'பயோ வெப்பனை'.... திட்டமிட்டு பரப்பியது 'சீனா'... '20 லட்சம் கோடி' நஷ்டஈடு கோரி 'அமெரிக்கா வழக்கு'... 'உலக நாடுகள் ஆதரவு...'
- 'விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு'... தமிழக மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!
- “4 மாச சம்பளம் அட்வான்ஸ்!”.. ‘இவங்களுக்கு கொடுக்காம யாருக்கு கொடுக்க போறோம்?’ - மாநில அரசின் ‘பாராட்டத்தக்க’ முடிவு!
- போதும் ‘லாக் டவுன்’ எல்லாம்... ‘60 வயசுக்கு’ மேலதான் ‘ஆபத்து’... மத்தவங்க ‘வேலைக்கு’ போங்க... ‘அதிபர்’ கருத்தால் பெரும் ‘சர்ச்சை’...