'அச்சுறுத்தும்' கொரோனா... 'நோயாளிகள்' தான் பர்ஸ்ட்... சொந்த திருமணத்தில் 'டாக்டர்' மாப்பிள்ளை செய்த தியாகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே மெல்ல பரவி வருகிறது. இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இதற்காக சீனாவை சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் அரசுடன் இணைந்து தீவிரமாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் சீனாவை சேர்ந்த மருத்துவர் தன்னுடைய சொந்த திருமணத்திற்காக சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. சீனாவின் ஷான்டாங் மாகாணம் ஹெஜி நகரைச்சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கடந்த 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
மணமகனின் பெற்றோர் உட்பட மொத்தம் 5 பேரே கலந்து கொண்ட இந்த திருமணத்தில் திருமணம் முடிந்த கையோடு ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டு, மாப்பிள்ளை மீண்டும் மருத்துவமனை திரும்பி விட்டார். இந்த தகவலறிந்த பலரும் அவரை மனமார வாழ்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து மணமகள் கூறுகையில், ''எனது கணவர் திருமணத்திற்கு 10 நிமிடம் மட்டுமே என்னுடன் இருந்தார். அதனால் எனக்கு வருத்தமில்லை நாங்கள் இதை முன்னரே திட்டமிட்டுவிட்டோம். கொரோனாவிற்கு எதிராகப் போராட வேண்டியதே தற்போது முக்கியம்,'' என தெரிவித்து இருக்கிறார்.
ஒவ்வொருவருக்கும் திருமணம் குறித்த ஆயிரம் கனவுகள் இருக்கும் என்றாலும், சேவைக்கு முக்கியத்துவம் அளித்து மருத்துவர் செய்த இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முதுமையில் தாக்கிய கொரோனா வைரஸ்’... ‘ஐசியூவில் பரிவுடன் கலந்த’... ‘கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள்’... ‘இதயத்தை உருக்கும் வீடியோ’!
- ‘என் அம்மாவ எங்கிட்ட குடுங்க!’.. ஆம்புலன்ஸ் பின்னாலேயே ஓடிய மகள்.. கலங்க வைத்த சம்பவம்!
- 'நிச்சயமா இது கடவுளின் குழந்தை தான்'... மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட 'அதிசய நிகழ்வு'!
- ‘வெயில் நேரத்துல கொஞ்சம் கொரோனா குடிங்க!’.. ‘அட ராமா!.. மொதல்ல இந்த பேர மாத்துங்கப்பா.. ரூ.100 கோடி தர்றோம்!’
- ‘கொரோனா’ அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர் ‘தப்பியோட்டம்?’... ‘அதிர்ச்சியடைந்த’ மருத்துவர்கள் ‘போலீசாரிடம்’ கோரிக்கை... ‘அச்சத்தை’ ஏற்படுத்தியுள்ள சம்பவம்...
- ‘டிசம்பரிலேயே’ கொரோனா பற்றி ‘எச்சரித்த’ மருத்துவர்... ‘வதந்தி’ எனக் குற்றஞ்சாட்டிய அதிகாரிகள்... ‘காப்பாற்ற’ நினைத்தவருக்கு ‘கடைசியில்’ நேர்ந்த பரிதாபம்...
- 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3-வது நபர்'...'யாரும் பீதியாக வேண்டாம்!'.. கேரள சுகாதாரத் துறை!
- '10 நாள்ல என் பொண்ணுக்கு கல்யாணம்'... 'கதறி துடிக்கும் பெற்றோர்'... 'ஐடி' ஊழியர் வெளியிட்ட வீடியோ!
- 'எங்கள தனியா வச்சா அதனால என்ன?'... 'மருத்துவ முகாமில் சும்மா அதிரவிட்ட'... ‘சீனாவிலிருந்து திரும்பிய இந்திய மாணவர்கள்’!
- 'சென்னை பெண்ணுக்கு வந்த காய்ச்சல்'... 'அலெர்ட்டான மருத்துவர்கள்'... ரெடியான 'ஸ்பெஷல் வார்டு'!