பளபளக்குது புதுநோட்டு.. ஊழியர்களுக்கு கட்டுக்கட்டாக போனஸ்.. கைநிறைய கரன்ஸிகளுடன் சென்ற பணியாளர்கள்.. யாருப்பா நீங்க..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கட்டுக்கட்டாக போனஸ் தொகையை வழங்கி இருக்கிறது. இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இவரு எங்க அப்பா.. ஆனா அவருக்கு அது தெரியாது".. மறதி நோயால் பாதிக்கப்பட்ட நபர்.. கண்கலங்க செய்யும் வீடியோ..!

மத்திய சீனாவில் இயங்கி வருகிறது ஹெனான் மைன் நிறுவனம். கிரேன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் 2700 ஊழியர்கள் இருக்கின்றனர். கடந்த ஆண்டை பொறுத்தவரையில் சீனா பொருளாதார ரீதியாக பல சவால்களை சந்தித்தது. இருப்பினும் கடந்த ஆண்டு ஹெனான் மைன் நிறுவனத்திற்கு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்திருந்தது. 2022 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் மொத்த சேல்ஸ் மதிப்பு 2.3 பில்லியன் என சொல்லப்படுகிறது.

பொதுவாக, ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை போனஸாக ஊழியர்களுக்கு கொடுப்பது வழக்கம். அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்த பல்வேறு விதமாக போனஸ் மற்றும் இதர சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் சீனாவின் ஹெனான் மைன் நிறுவனம் போனஸ் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

அதில் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மில்லியன் கணக்கில் பணம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சுமார் 2 மீட்டர் அளவுக்கு பணம் மேடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 5 மில்லியன் யுவான்களும் அடுத்த 30 பேருக்கு தலா ஒரு மில்லியன் யுவானும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற ஊழியர்களுக்கு பணமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஹெனான் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆஸ்திரேலியா, வியட்நாம், தாய்லாந்து, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மால்டா, துர்க்மெனிஸ்தான், சவுதி அரேபியா, பெரு மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. சீனா துவங்கி உலகெங்கிலும் 380 கிளைகளை இந்த நிறுவனம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், ஹெனான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கட்டுக்கட்டாக போனஸ் தொகையை கொடுக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Also Read | மகளின் கிரிக்கெட் கனவுக்காக நிலத்தை எல்லாம் விற்ற அப்பா.. இந்தியாவையே பெருமைப்பட வச்ச மகள்.. நெகிழ்ச்சி பின்னணி..!

CHINESE COMPANY, BONUS, WORKERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்