Kris Wu : கனேடிய இளம் பாடகருக்கு 13 ஆண்டுகள் சிறை..! சீன நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! பரபரப்பு பின்னணி

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரபல கனேடிய ராப் பாடகர் Kris Wu என்பவருக்கு வன்புணர்வு வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

                                                                    AP Photo

சீனாவில் பிறந்து கனடாவுக்கு குடியேறிய பிரபல 32 வயது பாடகர் Kris Wu. பாப் பாடகரான இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் கனடாவில் வசித்து வருகிறார். பிரபல  தென்கொரிய சீன இசைக்குழு உறுப்பினராக இருந்த இவர், பின்னர் நடிகராகவும் ராப் பாடகராகவும் புகழ்பெற்றார்.

                                                                                        

                                                                                               AFP / Getty Images

இந்நிலையில் Du Meizhu என்கிற மாணவி தன்னை வன்கொடுமை செய்ததாக Kris Wu மீது கடந்த 2020-ஆம் ஆண்டு புகார் அளித்ததை தொடர்ந்து,  Kris Wu விசாரிக்கப்பட்டு வந்தார். தற்போது Kris Wu மீதான Du Meizhu முன்வைத்த குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணைக்கு வந்ததை அடுத்து இந்த குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்பட்டதாக கூறப்படுவதுடன் இவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக CNN, AP News உள்ளிட்ட பல ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த தீர்ப்பை அளிக்கும் பொழுது கனேடிய தூதராக அதிகாரிகள் உடன் இருந்ததாகவும், அந்நாட்டு அரசின் ஊடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

KRIS WU, DU MEIZHU

மற்ற செய்திகள்