'இந்திய படைகள்' மீது 'தாக்குதல்' நடத்துங்கள்... 'சீன' ராணுவ ஜெனரல் 'உத்தரவு...' அமெரிக்க 'உளவுத்துறை' அதிர்ச்சி 'தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்தும்படி சீன ராணுவ ஜெனரல் ஜோ ஜோங்கியூ (Zhao Zongqi) கட்டளையிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு அருகே இந்திய சீனா மோதலை அடுத்து, தற்போது அப்பகுதியில் பதற்றத்தை தனிப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவை தாக்கும்படி சீன ராணுவ ஜெனரல் உத்தரவு அளித்தது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை  தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியா - சீனா எல்லையில் இரு நாட்டு படை வீரர்களும் குவிக்கப்பட்டதில் இருந்து சீன ராணுவ ஜெனரல் ஜோங்கியூ நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் சீனாவை பலவீனமான நாடாக கருதிவிடக் கூடாது என்பதால் இந்தியாவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் அந்நாட்டு வீரர்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்