'அமெரிக்காவுக்கு' கடும் 'எதிர்ப்பு...' 'தெரிவித்த 2வது நாளில்... ' இஸ்ரேலுக்கான 'சீன தூதருக்கு' நேர்ந்த சோகம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இஸ்ரேலுக்கான சீன தூதர் வடக்கு டெல் ஆவிவ்-ல் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டிற்கான சீன தூதர் டு வெய் (வயது 58) கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான சீன தூதராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு முன் உக்ரைன் நாட்டின் தூதராக அவர் பணியாற்றினார்.

இந்நிலையில் அவர் வீட்டில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் இறந்ததற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர். டு வெய்க்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர்.

இஸ்ரேலுக்கும், சீனாவுக்குமிடையிலான உறவு சிறப்பாகவே உள்ளது. இருப்பினும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது சீனாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று விஷயத்தில் சீனா சில உண்மைகளை மறைக்கிறது என்று அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு டு வெய் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். கண்டனம் தெரிவித்திருந்த 2-வது நாளில் டு வெய் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்