'டாக்டர், என் முகத்தை இன்னும் வசீகரமா மாத்துங்க'... '4 மணி நேர ஆபரேஷன், கரைந்த 45 லட்சம்'... கண்ணாடியில் முகத்தை பார்த்ததும் நொறுங்கி போன நடிகை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயற்கை வழங்கியுள்ள மிகப்பெரிய கொடை என்பது அவர்களின் உடல் தான். அந்த உடலைப் பேணி காப்பது என்பது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். ஆனால் அதை விட்டு இயற்கைக்கு மாறாக இந்த அழகு எனக்கு போதாது இன்னும் அழகு தேவை என, இயற்கைக்கு மாறாகச் செல்லும் போது பல பின்விளைவுகள் ஏற்படுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

Chinese actor Gao Liu nose tip rotted after botched cosmetic surgery

'டாக்டர், என் முகத்தை இன்னும் வசீகரமா மாத்துங்க'... '4 மணி நேர ஆபரேஷன், கரைந்த 45 லட்சம்'... கண்ணாடியில் முகத்தை பார்த்ததும் நொறுங்கி போன நடிகை!

சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகை காவ் லியூ. இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இவரின் வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரைக் கவர்ந்துள்ளார். இதனால் காவ் லியூக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் தனது முகத்தில் இன்னும் வசீகரம் வேண்டும் என்ற விசித்திரமான ஆசை காவ் லியூக்கு தோன்றியது. இதனால் மூக்கில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிட்டார்.

இந்த அறுவை சிகிச்சை தனது முகத்தை இன்னும் வசீகரமாக மாற்றும் அதோடு தனது திரையுலக வாழ்க்கையிலும் பல வாய்ப்புகள் வரும் என காவ் லியூ நினைத்தார். இதையடுத்து மருத்துவரை அணுகிய காவ் லியூ தனது விருப்பத்தைத் தெரிவித்து அதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள இருப்பதைக் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த அக்டோபர் மாத இறுதியில் காவ் லியூயின் மூக்கின் நுனியில் உள்ள குருத்தெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்குப் பின்னர் தான் அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போனது.

மூக்கின் நுனியில் உள்ள குருத்தெலும்பில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்ளாததால் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். இதற்காக அவர் 61 நாட்கள் மருத்துவமனையில் தங்கி, மறு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால், சுமார் 45 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இருந்த போதும் அவரது முகம் பழைய நிலைக்குத் திரும்பவில்லை.  அறுவை சிகிச்சை செய்த இடம் கருப்பாக மாறிவிட்டது.

எந்த அறுவை சிகிச்சை செய்தால் தனது வாழ்க்கை மாறும் என காவ் லியூ எண்ணினாரோ, அந்த அறுவை சிகிச்சையே அவரது திரையுலக வாழ்க்கையைக் கேள்விக்குறியாக மாற்றி விட்டது. இதையடுத்து சீன சமூக வலைத்தளமான வெய்போவில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை  கோ லியூ, “நான்கு மணி நேர அறுவை சிகிச்சை என்னை மிகவும் அழகாக மாற்றும் என்று நம்பினேன். ஆனால், அது மோசமான கனவின் தொடக்கமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

அதோடு  ''இது போன்று யாரும் முயற்சி செய்ய வேண்டாம்” என்று தனது ரசிகர்களையும் எச்சரித்துள்ளார். காவ் லியூயின் இந்த பதிவு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், நீங்கள் தைரியமாக இருங்கள் என தங்களின் ஆதரவை காவ் லியூக்கு தெரிவித்து வருகிறார்கள். இயற்கைக்கு மாறாக நாம் செல்லும் போது அது அவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளது இந்த சம்பவம்.

மற்ற செய்திகள்