கொரோனா 2-வது அலையில் ‘உருமாறிய’ வைரஸ்.. அடுத்த குண்டை தூக்கிப்போட்ட ‘சீன’ மருத்துவர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவாகியுள்ளதால், வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும் என அதிர்ச்சி தகவலை சீன மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிகொள்ளத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதிய அறிகுறிகளை கொரோனா வைரஸ் கொண்டுள்ளதால், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது மிகவும் சவாலானதாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஜுலின், ஹீலோங்ஜியாங் ஆகிய மாகாணங்களில் உள்ள கொரோனா நோயாளிகள் குணமடைய அதிக நேரம் எடுத்துக்கொண்டிருப்பதாக தேசிய சுகாதார ஆணைய நிபுணர் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வுஹானில் தோன்றிய முதல் கொரோனா பாதிப்பை ஒப்பிடும்போது ஜூலி, ஹீலோன்ங்ஜியாங் மாகாணங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளிடையே வித்தியாசமாக வெளிப்படுவதாக சீனா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சீனாவின் உயர்மட்ட மருத்துவ பராமரிப்பு மருத்துவர்களில் ஒருவரான கியூ ஹைபோ அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார். அதில், வுஹானை ஒப்பிடும்போது சீனாவின் வடகிழக்கு பகுதியில் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தெரிய அதிக நேரம் எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பை முன்பே கண்டறிவதில் அதிகாரிகளுக்கு கடினமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' வார்டுக்கு பிரியாணியுடன் வந்த 'டெலிவரி' பாய்!.. அதிர்ந்த 'மருத்துவமனை'... 'ருசிகர' சம்பவம்'!
- 'மாஸா இருக்கா?.. ''மாஸ்க் மட்டும் இல்ல.. 'இவங்க கொரோனவ டீல் பண்ணிய விதமும் மாஸ்தான்'.. 'பாதித்தோர் எண்ணிக்கையும்.. குணமானோர் எண்ணிக்கையும்.. நீங்களே பாருங்க!'
- இது இருந்தா 'கொரோனா' கிட்ட நெருங்காதாம்... ஆனா வெலைதான் 'ஒரேயடியா' தூக்கியடிக்குது!
- மொத்தமாக மூடப்பட்ட 'ஹோல்சேல்' கடைகள்... 'இந்த' அத்தியாவசிய பொருட்களின் விலை 'கிடுகிடுவென' உயரலாம்!
- தமிழகத்தில் துளிர்விடும் நம்பிக்கை!.. இன்று ஒரே நாளில் 987 பேர் குணமடைந்தனர்!.. முழு விவரம் உள்ளே
- டைம் குடுத்து 'ஆப்பு' வைக்குறவங்களா நீங்க?... அசராமல் 'திருப்பி' அடித்த சீனா!
- கொரோனாவால யாரெல்லாம் 'இறப்பாங்க'ன்னு... 'அது' சரியா கணிச்சு காட்டிடும்...! புதிய ஆய்வு முடிவு...!
- 'குணமடைந்த' பின்னும் 'பாசிடிவ்னு' முடிவு வருதா? 'கவலைப்படாதிங்க...' 'அது அப்படித்தான்...' 'விஞ்ஞானிகள் கூறிய ஆறுதலான விஷயம்...'
- 'வியாபாரம் பண்ணதெல்லாம் போதும்... சீக்கிரம் இடத்த காலி பண்ணுங்க'.. 'நம்ம ஊருக்கு போகலாம்!'.. அவசர அவசரமாக அமெரிக்காவில் மசோதா தாக்கல்!.. சீனாவில் பரபரப்பு!
- சீனா, இத்தாலியை விட 'இந்திய' வைரஸ் ஆபத்தானது... நேபாள பிரதமரின் 'சர்ச்சை' பேச்சு!