‘சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்...' 'இந்தியாவுடன்' சேர்ந்து செயல்பட 'முடிவெடுத்த நாடு...' 'உலக' நாடுகளுடன் சேர்ந்து 'செயல்படவும் திட்டம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீன இராணுவத்தால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் அமெரிக்கா கூட்டாளியாக முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

இதுகுறித்து ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "சீன கம்யூனிஸ்ட்கட்சியின் இராணுவ முன்னேற்றங்களைப் பொறுத்தவரை, அவை உண்மையானவை. சீன அதிபர்  ஜி ஜின்பிங் தனது இராணுவ சக்தியை வளர்த்துக் கொள்ள விரும்புகிறார் எனத் தெரிவித்தார்.

இந்த அச்சுறுத்தலைப் உறுதிசெய்ய எங்களது பாதுகாப்புத் துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக உலகம் முழுவதும் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான, பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் கூட்டாளிகளாக இணைந்து செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி எல்லைப் பிரச்னையை நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறது எனக் குறிப்பிட்ட அவர், அவர்கள் நிச்சயமாக  ஒரு தந்திரமான சூழ்நிலையைப் பயன்படுத்துவார்கள் அவர்கள் நீண்ட காலமாக இந்த அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழலில் சீனாவுக்கு எதிராக நிறைவேற்ற 60 மசோதாக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், அவை ஒவ்வொன்றாக விரைவில் நடைமுறைக்கு கொண்டுரவப்படும் என்றும் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்