இருமிக் கொண்டே இருந்த பெண்.. அடுத்த சில நிமிசத்தில் உடைந்த எலும்புகள்??.. "அந்த உணவு சாப்பிட்டது தான் காரணமா?".. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தொடர்ந்து இருமல் ஏற்பட்டுக் கொண்டே இருந்த பெண் ஒருவருக்கு நான்கு விலா எலும்புகள் முறிந்தது தொடர்பான அதிர்ச்சி செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதன் பின்னணியும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Advertising
>
Advertising

சீனாவின் ஷாங்காய் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஹுவாங் என்ற பெண். சமீபத்தில் ஹுவாங் உணவை அருந்திக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதுவும் காரமான உணவுகளை அவர் அந்த சமயத்தில் உட்கொண்டிருந்ததாக தகவல்கள் கூறும் நிலையில், இதன் காரணமாக தொடர்ந்து அவர் இருமிக் கொண்டே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடுமையாக அவர் இருமிக் கொண்டே இருந்த சூழலில், கடும் அதிர்ச்சி சம்பவம் ஒன்றும் அங்கே அரங்கேறி உள்ளது. ஹுவாங்கின் மார்பு பகுதியில் ஏதோ முறிந்ததை போன்ற சத்தத்தை அவர் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முதலில் அதனை பெரிதாக ஹுவாங் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.

ஆனால், தொடர்ந்து தன்னால் பேச முடியாமலும், மூச்சு விடும் போது வலியையும் ஹுவாங் உணர்ந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. இதற்கு காரணம், ஹுவாங்கின் நான்கு விலா எலும்புகள் முறிந்திருப்பது ஸ்கேனில் கண்டுபிடிக்கப்பட்டது தான். இதனால், அவரது மார்புப் பகுதியில் கட்டு போட்டு ஒரு மாத காலம் ஓய்வெடுத்தால் மட்டும் தான் குணமடைய முடியும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஹுவாங் சற்று உடல் மெலிந்து எலும்புகள் வெளியே தெரியும் படி இருப்பதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதன் காரணமாக இருமல் ஏற்பட்டு தாங்காமல் விலா எலும்புகள் அடைந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்து குணமடைந்த பிறகு, தனது உடல் எடையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஹுவாங் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

கடுமையாக இருமியதால் பெண்ணின் விலா எலும்புகள் உடைந்தது தொடர்பான விஷயம், தற்போது உலக அளவில் பலரது மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் உண்டு பண்ணி உள்ளது.

CHINA, WOMAN, RIBS FRACTURE, COUGH, SPICY FOODS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்