'போர் நடந்துச்சுன்னா...' கண்டிப்பா 'நீங்க' தோத்துடுவீங்க...! 'வல்லரசு நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்த சீனா...' - என்ன காரணம்...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென்சீனக் கடல் மற்றும்  தைவான் மீதும் ஏற்பட்டுள்ள சர்ச்சையில், இது ஒரு கட்டத்தில் போர் வரைக்கும் செல்லும் என்றால் அமெரிக்கா தோற்கடிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சுடன் சேர்ந்து  கூட்டு இராணுவ  பயிற்சிகளில் அமேரிக்கா ஈடுபட்டது. இது சீனாவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும்,  தெற்கு ஜப்பானில் பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து இராணுவப் பயிற்சிகளுக்கான பொருட்களை கொண்டு எடுத்து செல்லும்போது அதிகப்படியான எரிபொருள்களை வீணடிப்பதாக சீனா குற்றச்சாட்டை எழுப்பியது.

தென் சீனக் கடல் முழுவதையும் சீனா தங்களுக்கு மட்டுமே உரிமை என நினைக்கிறது.  மேலும் தைவான் மற்றும் ஹாங்காங் பிரச்சினை, ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் போன்ற விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது

இப்படியாக மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், தென் சீனக் கடலில் ஏதேனும் மோதல் ஏற்பட்டால் அமெரிக்கா கண்டிப்பாக தோற்கடிக்கப்படும் என்று ஒரு தலையங்கத்தை குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இது உலக அரசியலில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது கடற்படையில் மிகவும் வலுவான கட்டமைப்பை உருவாக்கி உலக நாடுகளில் செல்வாக்கு மிக்க நாடாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் ஆகிய இரண்டிலும் சீனா தனது கடல் ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது, சீன-அமெரிக்க மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்