'வுஹானில்' இறந்தவர்களின் எண்ணிக்கை 'இதுதானா?'... ஆயிரக்கணக்கான 'அஸ்தி' கலசங்களால் எழுந்துள்ள 'புதிய' சந்தேகம்...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது புதிய சந்தேகம் எழுந்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்திலுள்ள வுஹானில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், வுஹான் நகரில் கொரோனாவால் 2,548 பேர் உயிரிழந்ததாக சீன அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து 8 தகன மையங்களில் இருந்து உயிரிழந்தவர்களின் சாம்பலை அவர்களுடைய குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளலாம் என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான அஸ்தி கலசங்கள் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மேலும் கடந்த வாரம் புதன், வியாழன் ஆகிய 2 நாட்களில் மட்டும் ஒரு தகன மையத்திலிருந்து 2,500 அஸ்தி கலசங்கள் விநியோகத்துக்காக லாரியில் ஏற்றப்பட்டதாக கைக்ஸின் எனும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இவற்றில் எத்தனை கலசங்களில் சாம்பல் நிரப்பப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து விநியோகிக்கப்படும் அஸ்தி கலசங்களின் எண்ணிக்கை குறித்த கேள்விகளுக்கு 2 தகன மையங்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும், மற்ற தகன மையங்களில், 'இது தொடர்பான புள்ளிவிவரங்கள் எங்களிடம் இல்லை' எனவும், 'இந்த எண்ணிக்கையை வெளியிட எங்களுக்கு அதிகாரம் இல்லை' எனவும் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக வுஹான் நகரில் கொரோனா வைரஸால் 2,548 பேர் உயிரிழந்ததாக அரசு கூறுவதைக் காட்டிலும், இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஐபிஎல்' நடக்கலேன்னா... கண்டிப்பா 'குடுக்க' மாட்டோம்... கிரிக்கெட் சங்கத்தின் 'அறிவிப்பால்' வீரர்கள் கலக்கம்!
- ‘சென்னையில் ஒருவருக்கு கொரோனா உறுதி’.. ‘அவர் சென்ற இடம் வெளியீடு’.. ‘அந்தநாள் அங்கபோன எல்லோரும் இத பண்ணணும்’.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
- கிடைத்தது 'கிரீன்' சிக்னல்... 'கொரோனாவை' குணப்படுத்த... 'பழைய' சிகிச்சை முறையை 'கையில்' எடுக்கும் அமெரிக்கா!
- ‘கணுக்கால் முறிவு’!.. ‘இன்னும் 240 கிமீ இருக்கு’.. ‘எனக்கு வேற வழி தெரியல’.. ஊரடங்கால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
- ‘எனக்கு கொரோனா இருக்கு!’.. போலீஸாரின் மீது எச்சில் துப்பிய இளைஞர்.. கவலை தெரிவித்த உயர்காவல் அதிகாரி!
- 'கொரோனா வைரஸின் பிடியில் சிக்காமல்'... 'உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள நாடுகள் இவைகள் தான்'!
- “தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி!”.. “முதல் முறையாக அதிக எண்ணிக்கை!”.. பாதிக்கப்பட்டோர் 124 ஆக உயர்வு!
- ‘20 வருஷமா ராணுவத்துல இருக்காரு’.. ‘அவருக்கு இப்டி ஆனதை யாராலையும் தாங்கிக்க முடியல’.. கதறியழுத குடும்பம்..!
- 'லாக் டவுன் தொடருமா?'... ஏப்ரல் 14க்கு பிறகு என்ன செய்யப்போகிறது அரசு?... கொரோனாவை ஒழிக்க... ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!
- வெளில போய்ட்டு 'வீட்டுக்குள்ள' வர்றீங்களா?... கட்டாயம் இதெல்லாம் 'பாலோ' பண்ணுங்க!