‘உதவி செய்வதை நிறுத்திய அமெரிக்கா’... ‘கை கொடுக்க முன்வந்த சீனா’... 'சந்தேகத்தை கிளப்பும் நெட்டிசன்கள்’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா நிதியை நிறுத்துவதாக அறிவித்த நிலையில், சீனா கூடுதல் நிதி வழங்க முன்வந்துள்ளது.

கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார  நிறுவனம், சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், நிலைமையை கையாள்வதில் அது தோல்வி அடைந்து விட்டதாகவும் கூறி, அதிருப்தி தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிதி வழங்குவது முற்றிலும் அந்நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதற்கு உலக சுகாதார அமைப்பு, ஐ.நா. உள்ளிட்டவைகள் வருத்தம் தெரிவித்திருந்தன.

ஏனெனில், உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதி வழங்குவதில் மிக முதல் முக்கிய நாடான அமெரிக்கா, ஆண்டுக்கு 400 மில்லியன் டாலர் முதல் 500 மில்லியன் டாலர் வரை WHO-க்கு வழங்கியது. அதே நேரத்தில் இதற்கு மாறாக, சீனா ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே பங்களித்தது. எனினும் கொரோனா விவகாரத்தில் உலக சுகதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக உள்ளதாக அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. இதனால் அமெரிக்கா நிதியை நிறுத்தியது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பிற்கு கூடுதல் நிதி வழங்க சீனா முன்வந்துள்ளது. அதன்படி 30 மில்லியன் டாலர் கூடுதல் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக 20 மில்லியன் டாலர் வழங்கி வந்த சீனா, தற்போது கொரோனாவை எதிர்த்துப் போராட இந்த நிதி கூடுதலாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் மீது சீன அரசும், சீன மக்களும் வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டும் வகையில் இந்த கூடுதல் நிதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ட்ரம்பின் குற்றச்சாட்டில் உண்மை இருக்காலாமோ என்று கூறும் நெட்டிசன்கள், தவறை மறைக்க பணத்தை வாரி வழங்குவதாக சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்