என்ன 'அமெரிக்காவுக்கு' சப்போர்ட்டா?... "உண்டு இல்லன்னு பண்ணிடுவோம்"... கடுமையாக 'எச்சரித்த' சீனா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கதிகலங்க செய்துள்ளது. இதுவரை உலகளவில் சுமார் 34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகி போயுள்ளது. சீனா வேண்டுமென்று தான் வைரசை பரப்பியது என்றும், சீனாவால் உலக நாடுகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதால் சீனாவுக்கு எதிராக தன்னால் முடிந்ததை செய்வேன் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாக  அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது.

அமெரிக்காவின் இந்த கருத்திற்கு ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவித்திருந்தது. ஆஸ்திரேலியாவின் இந்த ஆதரவை தொடர்ந்து சீனா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சீனா தரப்பில், 'சீன தூதரகம் சிறுமைத்தனமான தந்திரங்களில் ஈடுபடாது. ஆனால் மற்றவர்கள் அப்படி மேற்கொள்ளும் போது நாங்களும் பதிலடி கொடுப்போம். சீனா நுகர்வோர்கள் ஆஸ்திரேலியா பொருட்கள் வாங்குவதை கை விடுவார்கள். சீன மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியா வருவதை கை விடுவார்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சி மற்றும் மது வகைகளுக்கு சீனா தடை விதிக்கும்' என ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்