சாப்பாடு இறங்கலன்னு ஹாஸ்பிடல் போன இளம்பெண்.. "வயித்துக்குள்ள 3 கிலோ முடி".. விஷயம் தெரிஞ்சதும் உறைந்து போன மருத்துவர்கள்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த மருத்துவர்கள் இளம்பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் அவரது வயிற்றிலிருந்து கிடைத்த விஷயம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

சீனாவின் சான்சி என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள சியான் என்னும் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தாத்தா பாட்டிகளுடன் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அந்த இளம்பிபெண்ணின் பெற்றோர்கள் நாட்டின் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படும் நிலையில் அவர் தாத்தா பாட்டி அரவணைப்பில் இருந்து வருகிறார்.

அப்படி ஒரு சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த இளம் பெண்ணால் உணவருந்த முடியாமல் கடும் அவதிக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், அந்த இளம்பெண் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், அந்த இளம் பெண்ணின் வயிற்றினை பரிசோதித்து பார்த்த போது மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

அதாவது அந்த சிறுமியின் வயிற்றில் சுமார் மூன்று கிலோ அளவுக்கு தலை முடி, பந்து போல உருண்டை வடிவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் கண்டதும் மருத்துவர்கள் அதிர்ந்து போகவே இதற்கான காரணம் குறித்தும் சில தகவல்களை தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் அரவணைப்பில் இல்லாத காரணத்தினால் தாத்தா பாட்டியுடன் வளர்ந்து வரும் அந்த இளம் பெண்ணிற்கு தனது முடியை தானே உண்ணும் ஒரு வித வினோத பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது ஒரு விதமான நோய் போன்றது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பெண்ணால் உணவை அருந்த வயிற்றில் இடம் இல்லாமல் போயுள்ளது. அதாவது, தலை முடி வயிற்று பகுதியை அடைத்துக் கொண்டதால் மேற்கொண்டு உணவை செலுத்த முடியாமலும் அந்த இளம்பெண் அவதிப்பட, பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது தான் உண்மை தெரிய வந்துள்ளது.

HAIR, CHINA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்