என்ன கொடுமை! மத்த நாடுகள்ல இருந்து 'கொரோனா' பரவுதாம்... 'அதிரடி'யில் இறங்கிய சீனா!
முகப்பு > செய்திகள் > உலகம்வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா பரவுவதால் எல்லைப்பகுதிகளில் சோதனையை சீனா தீவிரப்படுத்தி இருக்கிறது.
கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வல்லரசு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளையும் தீவிர துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஆனால் சீனாவில் இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. தற்போது அங்கு சமூக தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாகவும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே வைரஸ் உறுதி செய்யப்படுவதாகவும் சீனா கூறியுள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் சீனாவில் நேற்று மட்டும் சுமார் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறதாம். இவர்களில் 23 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். வெளிநாட்டு பயண தொடர்பால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1610 ஆக உயர்ந்திருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. இதில் 811 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், 41 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் தற்போது அனைத்து எல்லைப்பகுதிகளிலும் தீவிர பரிசோதனை மற்றும் சிகிச்சையை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அப்பகுதிகளுக்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை கருவிகள் மற்றும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஊரடங்கால் 'இந்தியாவில்' இப்படியொரு மாற்றமா?... 'நம்பமுடியாத' உண்மை... 'நாசா' வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!
- 'கடையைத் திறக்க முடியுமா? முடியாதா?'.. 'பான் மசாலாவுக்கு அடிமையானவரால்' பெட்டிக்கடை ஓனருக்கு நேர்ந்த 'பெரும் சோகம்!'
- இனிமேல் 'இந்த' கடைகளும் இயங்கலாம்... மத்திய அரசு அனுமதி... முழுவிவரம் உள்ளே!
- உலகையே 'உலுக்கிவரும்' கொரோனா துயரத்திலும்... 'நம்பிக்கை' கொடுக்கும் 'மனிதர்கள்'... 'நெகிழவைக்கும்' சம்பவம்!...
- பல்வேறு கட்ட இடர்பாடுகளுக்கு பின் நிறைவேறும் 'மருத்துவர் சைமனின்' கடைசி விருப்பம்!
- "ஊரடங்கை தளர்த்தாதீர்கள்..." "குளிர்காலத்தில் 2வது அலை வீசக்கூடும்..." "விளைவுகள் மோசமாக இருக்கும்..." 'அமெரிக்காவை' எச்சரிக்கும் 'மருத்துவர்கள்...'
- ‘கொரோனா அச்சத்தால்’... ‘தடைப்பட்ட’... ‘150 ஆண்டுகள் பாரம்பரியம்’... ‘சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்’!
- 'எப்படி என் காரை நிறுத்தலாம் நீ...' 'காவலரை 50 முறை தோப்புக்கரணம் போட வைத்த வேளாண் அதிகாரி...' 'கொதித்துப் போன டிஜிபி...' 'சர்ச்சை வீடியோ...'
- 'கருப்பாக' மாறிய 'சீன' மருத்துவர்களின் சருமம்... கொரோனாவுக்கு எதிரான 'போராட்டத்தில்' பாதிப்பு... வெளியாகியுள்ள 'விளக்கம்'...
- 'கொரோனாவுக்கு சீனாதான் பொறுப்பு...' 'அமெரிக்கா' கேட்கும் மலைக்க வைக்கும் 'இழப்பீடு'...