'சீனாவில் பரவும் அடுத்த வைரஸ்...' 'இது கொரோனாவ விட செம ஸ்பீடா ஆள காலி பண்ணிடும்...' - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் இருந்து பரவி வரும் புபோனிக் பிளேக் நோய் 24 மணி நேரத்தில் மனித உயிரை பறிக்கும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ள செய்தி உலகநாடுகளை மீண்டும் பதற்றம் அடைய செய்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது, சீன மருத்துவமனை ஒன்றில் இருந்து புபோனிக் பிளேக் நோய்ப் பரவல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அரசு நாளிழலில் மங்கோலிய சுயாட்சி பகுதியில் இருக்கும் பயனூர் மருத்துவமனையில் மூன்றாம் நிலை தொற்றுப் பரவல் குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் அதன் தாக்கம் 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை தொடரும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும் இது கொரோனா வைரஸ் போலவே, வேகமாகவும் பரவக்கூடிய பெருந்தொற்று எனவும், தற்போதுவரை இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய்த்தொற்று மலை எலி, அணில் வகையைச் சேர்ந்த மர்மூத் என்ற விலங்குகளின் இருந்து ஈக்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்படுகிறது. மேலும் மர்மோத் இறைச்சியை சாப்பிட்டவர்களுக்கு தொற்று பரவியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் எலி, அணில், மர்மோத் ( marmot) போன்ற கொறி விலங்குகளின் இறைச்சியை உண்ண வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார மையமும் இந்த புபோனிக் பிளேக் நோய் மனிதர்களுக்கு பரவிய 24 மணி நேரத்தில் உயிரை பறிக்கும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்