தனக்கு தானே கொரோனா வர வைத்த பிரபல பாடகி?.. எதுக்காக தெரியுமா?.. பீதியை உண்டு பண்ணிய தகவல்!!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி இருந்தது. இரண்டரை ஆண்டுகளாக பல நாடுகளில் ஏராளமான உயிரிழப்புகள், பொருளாதார சிக்கல்கள், பாதிப்புகள் உள்ளிட்ட பல விஷயங்கள் உலக மக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கி இருந்தது.
Also Read | ஐபிஎல் ஏலத்துக்காக CSK போட்டு வெச்ச பிளான்?.. ராபின் உத்தப்பா உடைத்த சீக்ரெட்?.. இவங்க தான் டார்கெட்டா?"
இப்படி பல்வேறு பிரச்சனைகள், கொரோனா பேரிடர் காரணமாக உருவான நிலையில், சமீப காலமாக பல உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியும் வருகின்றனர். அதே போல, மக்களும் நிம்மதியாக வாழ்ந்து வரும் சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது, மீண்டும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக, சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆயிரகணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், பல மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், மற்ற உலக நாடுகள் மத்தியிலும் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது.
அப்படி ஒரு சூழலில், சீனாவை சேர்ந்த பிரபல பாடகி ஒருவர் செய்த விஷயம் தொடர்பான செய்தி, கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவை சேர்ந்த பிரபல பாடகி Jane Zhang Liangyin. இவர் சீனாவில் பல மேடைகளில் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ள நிலையில், தற்போது அதிர்ச்சிமிக்க செயல் ஒன்றில் அவர் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், தனக்கு தானே கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் வகையில் Jane Zhang நடந்து கொண்டதாக தெரிகிறது.
இதற்காக, கொரோனா பாசிட்டிவ் உள்ள நபர்களை அருகில் அவர் சந்தித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. சமீபத்தில் Jane பகிர்ந்த பதிவில், கொரோனாவுக்கு தயாராகி வருவதாகவும் முதலில் தனக்கு காய்ச்சல் வந்தது, அதன் பிறகு தொண்டை வலிக்க ஆரம்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் உடல் முழுவதும் வலிக்க ஆரம்பித்த சூழலில், தூங்கி மறுநாள் எழுந்த பிறகு அனைத்து அறிகுறிகளும் மறைந்து விட்டதாகவும் தான் எந்த மருந்தையும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பயன்படுத்தவில்லை என்றும் நிறைய தண்ணீர் குடித்து வைட்டமின் சி உணவுகளை எடுத்துக் கொண்டதாகவும் எழுதி இருந்தார்.
தனக்குத்தானே கொரோனா தொற்று ஏற்படுத்தியதாக பிரபல பாடகி பகிர்ந்த பதிவு கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி இருந்தது. சீனாவில் கொரோனா அதிகரித்து வரும் சூழலில் இப்படி ஒரு வேலையை செய்ததால் அதிக கண்டனங்களும் பாடகிக்கு எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர் பாடகி Jane Zhang பழைய பதிவினை நீக்கி விட்டு, சில விஷயங்களை கற்றுக் கொள்ளாமல் பதிவு செய்து விட்டேன் என்றும் அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு சமயத்தில், நிறைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் வேளையில், அப்போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் கலந்து கொள்ள முடியாது என்பதால் தற்போதே கொரோனா தொற்று பாதிப்பை வரவைக்க அப்படி அவர் செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. சீன பாடகியின் இந்த செயல், அதிகம் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.
Also Read | தோனி கையெழுத்து மேல் ஆட்டோகிராப் கேட்ட ரசிகர்.. இஷான் கிஷன் சொன்ன வைரல் பதில்.. Trending வீடியோ!!
மற்ற செய்திகள்
"கைநீட்டி கத்தாதீங்க, உங்க வேலைக்காரி இல்ல நான்".. நடுவானில் நடந்த சண்டை.. ஆவேசமான விமான பணிப்பெண்!!
தொடர்புடைய செய்திகள்
- ரகசிய தகவல்கள் லீக்.. அமெரிக்காவுக்கே Tough கொடுத்த சீன உளவாளி.. நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!
- AaronCarter : பாத் டப்பில் சடலமாக கிடந்த பிரபல அமெரிக்க பாடகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. முழு விபரம்..!
- "குணமடைந்தார் முதல்வர் முக.ஸ்டாலின்.. எப்போ டிஸ்சார்ஜ்..?". மருத்துவனை வெளியிட்ட அறிவிப்பு..!
- "தர்ப்பூசணி பழத்தை கொடுத்து வீடு வாங்கலாம்".. மக்களை ஷாக்-ஆக வச்ச நிறுவனம்.. ஓஹோ இதுதான் விஷயமா?
- 'கச்சா பாதாம்' பாடலை பாடியவருக்கு ரசிகர் கொடுத்த பரிசு.."என் வாழ்க்கையில இதெல்லாம் நடக்கும்னு நெனச்சுக்கூட பார்த்ததில்ல"..நெகிழ்ந்து போய்ட்டாரு மனுஷன்..!
- அதிக Antacids.? இதயத்துல பிளாக்.?.. பாடகர் KK குறித்து பரபரப்பை ஏற்படுத்திய Doctor-கள் ரிப்போர்ட்.?
- “கொரோனா பரவலின் மோசமான நிலையை உலகம் இன்னும் எதிர்கொள்ளல”.. பில்கேட்ஸ் சொன்ன பரபரப்பு தகவல்..!
- ‘மறுபடியும் முதல்ல இருந்தா..!’ சீன சுகாதார அதிகாரிகள் சொன்ன அதிர்ச்சி தகவல் என்ன..?!
- "கொரோனா விஷயத்துல இதை சாதிக்க உதவுன எல்லோருக்கும் நன்றி"…. பிரபல மருத்துவனை Dean நெகிழ்ச்சி தகவல்!
- “கட்டிப்பிடிக்க, முத்தம் கொடுக்க கூடாது”.. தம்பதிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த சீனா.. என்ன காரணம்..?