'இனிமேல் சின்ராச கையிலயே பிடிக்க முடியாது'... 'ஜாலி மூடில் சீனர்கள்'...ஓஹோ இது தான் காரணமா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவில் இருந்து சீனா மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், தற்போது அங்குச் சுற்றுலாக் களைக் கட்ட தொடங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா என்ற வார்த்தை முதல் முதலாகச் சீனாவிலிருந்து தான் உலகம் முழுவதும் பரவியது. கடந்த சில மாதங்களாகக் கடுமையான விளைவுகளை கொரோனா சீனாவில் ஏற்படுத்தியது. சீன வரலாற்றிலேயே இது போன்ற ஒரு பேரழிவை அந்நாடு சந்தித்தது இல்லை என்று சொல்லும் அளவிற்கு, கடுமையான உயிர்ச் சேதத்தை கொரோனா ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த நிலைமை சற்று மாறி அமைதியான சூழ்நிலை அங்குத் திரும்பி வருகிறது.

சீனா தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டது என்பதைக் காட்டும் விதமாக அங்குச் சுற்றுலாத் தலங்களில் மக்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அங்கு தற்போது 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சீன மக்கள் குடும்பம் குடும்பமாக, சுற்றுலாத் தலங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளார்கள். இதன் காரணமாக அங்கு 70 சதவீத சுற்றுலாத் தலங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலங்களில் மக்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் வெப்ப நிலை தீவிரமாகப் பரிசோதிக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மக்களை அனுமதிக்க அரசு அனுமதியளித்துள்ளது. 2020 மோசமாகத் தொடங்கினாலும் தற்போது புதிய நம்பிக்கையை அளித்திருப்பதாகச் சீனர்கள் உற்சாகமாகக் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்