மீண்டும் வேகமெடுக்கும் 'கொரோனா' தொற்று... 2-வது அலையா? கலக்கத்தில் சீனா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தோன்றிய சீனாவில் மீண்டும் 2-வது அலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து அமெரிக்கா, இத்தாலி, பிரேசில், இந்தியா, ஈரான், சிங்கப்பூர் என உலகம் முழுவதும் இந்த தொற்று பரவியது. சீனாவில் உருவான கொரோனா மற்ற நாட்டு மக்களுக்கு பெருத்த தலைவலியாக மாறி  கொத்துக்கொத்தாக மக்களை கொன்று குவித்தது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  57 பேர் பாதிப்புகளில் இருந்து குணமடைந்து உள்ளனர் என அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது. இதனால் சீனாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84 ஆயிரத்து 808 ஆக அதிகரித்து உள்ளது.  இதுவரை 4 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்