‘பைடன் வெற்றிக்கு’... 'இன்னும் வாழ்த்து சொல்லாத சீனா’... ‘அப்ப ட்ரம்ப் சொன்னது எல்லாம் பொய்யா’???... ‘வெளியான பரபரப்பு தகவல்’...!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வென்றதாக செய்திகள் வெளியாகியும், சீனா இதுவரை வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என்று தற்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தொடர்ந்து சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். கொரோனா வைரஸை சீனா வேண்டுமேன்றே பரப்பியதாக, அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். இதனால் இரு நாட்டுக்கும் இடையேயான வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

மேலும் 'ஜோ பைடன் வென்றால், அது சீனாவுக்கான வெற்றி. அமெரிக்காவை, சீனா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும்' என, டிரம்ப் கூறி வந்தார். ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில், பைடன் வென்றதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து, இந்தியா உள்பட பல நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து செய்திகளை வெளியிட்டனர்.

ஆனால், சீனா, ரஷ்யா, மெக்சிகோ உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. பைடன் வெற்றி குறித்து, சீன ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், அரசு தரப்பில் எதுவும் கூறப்படவில்லை.

இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் வாங்க் வென்பின் கூறியதாவது: ‘பைடன் வென்றதாக, ஊடகங்கள்தான் செய்தி வெளியிட்டு வருகின்றன. தேர்தலில், வெற்றி பெற்றதாக ஜோ பைடன் தனக்கு தானே அறிவித்துக்கொண்டதையும் கவனித்தோம். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், அந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படிதான் அறிவிக்கப்பட வேண்டும்.

இதுவரை அவ்வாறு அறிவிக்கப்படவில்லை. அதனால், சீன அரசு தரப்பில் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை. நாங்கள் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றுவோம்’, என்று அவர் கூறியுள்ளார். இதனால் சீனாவுடன், ஜோ பைடன் நட்புக் கொண்டிருப்பதாக, ட்ரம்ப் கூறியதெல்லாம் பொய்யா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவுக்கும், சீனாவுக்குக்குமான தொடர்பு, ட்ரம்ப் இருந்தது போன்றே, பைடன் பதவியேற்றாலும், சூமூக உறவு ஏற்பட வாய்ப்பில்லை என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்