அறிகுறியே இல்லாமல் ‘109 பேருக்கு’ கொரோனா.. யார் மூலமா பரவுனது?.. அவசர அவசரமாக ‘லாக்டவுன்’ போட்ட சீனா..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் சேல்ஸ்மேன் ஒருவரால் மீண்டும் கொரோனா தொற்று பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹீலாங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த சேல்ஸ்மேன் ஒருவர், கடந்த சில நாட்களாக அண்டை மாகாணமான ஜிலின் மாகாணத்திற்கு பயணம் செய்துள்ளார். அங்கு 2 நகரங்களுக்கு சென்ற அவர், பல மக்களை சந்தித்து தான் விற்பனை செய்ய உள்ள பொருள் குறித்து விளக்கமளித்து வந்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த சேல்ஸ்மேனுக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. இதனை அறியாத அந்த சேல்ஸ்மேன் ஜிலின் மாகாணத்தில் உள்ள 2 நகரங்களுக்கு சென்று நூற்றுக்கணக்கான மக்களை சந்தித்துள்ளார்.

இந்த நிலையில் ஜிலின் மாகாணத்தில் 109 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று பரவியிருப்பதை சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் ஜிலின் நகருக்கு வந்த சேல்ஸ்மேனால்தான் 109 கொரோனா பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து வைரஸ் உறுதி செய்யப்பட்ட அனைவரையும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் ஜிலின் மாகாணத்தில் உள்ள 2 நகரங்களையும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த நகரங்களில் உள்ள 1 கோடியே 25 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்