'நிலைமை இப்போ கொஞ்சம் 'ஓகே' தான்' ... ஆனாலும் பாம்பு பண்ணைக்கு நோ ... சீனாவில் தவிக்கும் 'பாம்பு கிராமம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ள நிலையில், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சீனாவிலுள்ள இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டபோதும் பாம்புகளை வளர்க்கும் பண்ணைகள் மீதான தடை தொடரும் என சீன அரசு தெரிவித்துள்ளது.

இதனால் பாம்பு வர்த்தகத்திற்கு பெயர் போன சீனாவின் சிசிகியாவ் கிராம மக்களின் தொழில் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. காரணம் அந்த கிராமத்திலுள்ள சுமார் 600 மக்கள் தினமும் 30 லட்சம் பாம்புகளுடன் வாழ்ந்து வருகின்றனர். சீனாவிலுள்ள மக்கள் பாம்பு உணவை விரும்பி உண்பர். அது மட்டுமில்லாது, ஆண்டுக்கு சுமார் ஒன்பதாயிரம் டன் பாம்புகள் வரை உணவுக்காகவும், மருந்திற்காகவும் சீனா வர்த்தகம் செய்து வருகிறது.

கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததும் அனைத்து இறைச்சி கடைகள் மற்றும் பாம்பு பண்ணைகளை தடை செய்து சீன அரசு உத்தரவிட்டது. நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து மற்ற இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து பாம்பு பண்ணை திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இதனால் பாம்பு தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தற்காலிக தடை என பாம்பு தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் வேளையில், சிலர் இந்த தடை நிரந்தரமானது என்கின்றனர். சீனாவின் வுஹான் பகுதியிலுள்ள இறைச்சிக் கடைகள் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக ஒரு தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்