ஒரு நாளைக்கு 40,000 பேருக்கு கொரோனா .. மறுபக்கம் போராட்ட களத்தில் மக்கள்.. என்ன நடக்குது சீனாவில்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி இருந்த கொரோனா தொற்று பாதிப்பானது, கடந்த 2019 ஆண்டு சீனாவில் உள்ள வுஹான் நகரில் தான் முதல் முதலில் கண்டறியப்பட்டது.

Advertising
>
Advertising

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடாக கொரோனா தொற்று பரவ ஆரம்பிக்க உலக நாடுகள் அத்தனையும் கொரோனாவின் பிடியில் சிக்கி கடுமையாக தவிக்கவும் செய்திருந்தது. உயிர் பாதிப்புகள், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட ஏராளமான விஷயங்களும் கொரோனா பேரிடர் காரணமாக நிகழ்ந்தது.

பல நாடுகளில் தடுப்பூசி உருவாக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவல்கள் குறைந்து தற்போது இயல்பு நிலைக்கும் மக்கள் அனைவரும் திரும்பி வருகின்றனர். அப்படி ஒரு சூழலில், சீன நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்து சில நாட்களாக வேகமாக பரவ ஆரம்பித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 40,000 பேருக்கு வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் முன்னணி நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், குவாங்ஸோ உள்ளிட்ட இடங்களில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த அதிக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்க, மக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காரணம் சீன அரசு தற்போது கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஜீரோ கோவிட் பாலிசி நடைமுறையை பின்பற்றுவது தான். அதாவது ஒரு பகுதியில் ஒன்று, இரண்டு பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த நகருக்கே லாக்டவுன் அறிவித்து அனைவரையும் பரிசோதனை செய்தும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த நடைமுறையை சந்தித்து வரும் சீன மக்கள், கொந்தளித்து போயுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்புகளைத் தாண்டி மக்கள் அனைவரும் போராட்ட களத்திலும் குதித்துள்ளனர். பொதுவாக சீனாவில் கட்டுப்பாடுகளை மீறி பொது வெளியில் இறங்கி போராடுவது என்பது அரிதான ஒன்று தான்.

ஆனால், தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல், போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். ஒரு பக்கம் அதிகரிக்கும் கொரோனா, மறுபக்கம் போராடும் மக்கள் என சீனாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருவதால், உலக நாடுகளில் உள்ள மக்கள் மத்தியிலும் அதிக பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.

CHINA, COVID, PROTEST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்