அவசர அவசரமாக 'எரிக்கப்பட்ட' ஆவணங்கள்... இழுத்து 'மூடிட்டு' எங்க நாட்ட விட்டு போங்க... சீனாவை பழிதீர்த்த அமெரிக்கா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா காரணமாக நாளுக்குநாள் அமெரிக்கா-சீனா இடையே பகை முற்றி வருகிறது.

கொரோனா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவை கண்டபடி சாட, பதிலுக்கு சீனாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்த இரு நாடுகளின் உறவு ஏறக்குறைய முடிவை நெருங்கி விட்டது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சீன தூதரகத்தை மூடும்படி உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே சீன தூதரகத்தில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் தூதரக அதிகாரிகளால் அவசர, அவசரமாக எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஹூஸ்டனில் உள்ள சீனத் துணை தூதரகத்தை 72 மணி நேரத்துக்குள் மூட அமெரிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

சீனா அறிவுசார் உடைமைகளை திருடியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அதே நேரம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவின் செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு சீனா தெரிவித்துள்ளது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்