'உலக நாடுகள்' அனைத்தும் 'கொரோனா பீதியில்...' 'ஆனால் சைலண்டா...' 'பூமிக்கடியில் சீனா பார்த்த வேலையை பாருங்க...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கொரோனா பீதியில் ஆழ்ந்திருக்கும் சூழலில் சீனா, சிறிய அளவிலான அணு ஆயுத சோதனையை, பூமிக்கடியில் நடத்தியதாக, அமெரிக்க பத்திரிகை ஒன்று குற்றம்சாட்டி உள்ளது.

இது குறித்து, அமெரிக்காவின், 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' இதழ்,வெளியிட்ட செய்தியில், 'சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலை, சீனா தவறாக கையாண்டதாக, அமெரிக்கா ஏற்கனவே குற்றம்சாட்டி வருகிறது. 'இதனால், அமெரிக்கா -- சீனா இடையிலான உறவு, மோசமடைந்துள்ளது. இந்நிலையில், பூமிக்கு அடியில், சீனா நடத்தியுள்ள, சிறிய அளவிலான அணு ஆயுத சோதனை, இரு நாட்டு உறவுகளை, மேலும் பாதித்துள்ளது' என,குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்த, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ஜாவோ லிஜியன், உலக நாடுகளிடையேயான அணுசக்தி சோதனைகள் தொடர்பான தடைகளை மதித்து கடைப்பிடிக்க வேண்டும என சீனா உறுதி கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். சீனா மீது அமெரிக்கா வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, எப்போதுமே, பொறுப்பான அணுகுமுறையை கடைப்பிடித்துவருகிறது. சர்வதேச கடமைகளை ஏற்று, அளித்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றி வருகிறது என்றும் லிஜியன் குறிப்பட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்